இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம்

709
icc-world-cup-t20-2016

16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள்  நடைபெறுகிறது.

முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு தெரிவாகும்.

 இலங்கை கிரிக்கட் புதிய தெரிவுக்குழு நியமனம் 

முதல் சுற்றுப் போட்டிகளின் கால நேர அட்டவணை

மார்ச் 8 :  ஹொங்கொங் எதிர் சிம்பாப்வே

மார்ச் 8 :  ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்காட்லாந்து

மார்ச் 9 : பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து

மார்ச் 9 : அயர்லாந்து எதிர் ஓமான்

மார்ச் 10 : ஸ்காட்லாந்து எதிர் சிம்பாப்வே

மார்ச் 10 : ஆப்கானிஸ்தான் எதிர்  ஹொங்கொங்

மார்ச் 11 : ஓமான் எதிர் நெதர்லாந்து

மார்ச் 11 : பங்களாதேஷ் எதிர் அயர்லாந்து

மார்ச் 12 : ஆப்கானிஸ்தான் எதிர் சிம்பாப்வே

மார்ச் 12 : ஸ்காட்லாந்து எதிர் ஹொங்கொங்

மார்ச் 13 : அயர்லாந்து  எதிர் நெதர்லாந்து

மார்ச் 13 : பங்களாதேஷ் எதிர்  ஓமான்

15ஆம் திகதி ஆரம்பமாகும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணியும் மற்றைய பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

சூப்பர்-10 சுற்று  போட்டிகளின் கால நேர அட்டவணை

மார்ச் 15 : இந்தியா எதிர் நியூசிலாந்து

மார்ச் 16 : பாகிஸ்தான் எதிர் ‘ஏ’பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 16 : இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்

மார்ச் 17 : இலங்கை எதிர் ‘பி’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 18 : அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து

மார்ச் 18 : இங்கிலாந்து எதிர் தென் ஆபிரிக்கா

மார்ச் 19 : இந்தியா எதிர் பாகிஸ்தான்

மார்ச் 20 : தென் ஆபிரிக்கா  எதிர் ‘பி’பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 20 : இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்

மார்ச் 21 : அவுஸ்திரேலியா எதிர் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 22 : பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து

மார்ச் 23 : இங்கிலாந்து எதிர் ‘பி’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 23 : இந்தியா எதிர் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 25 : பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

மார்ச் 25 : தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள்

மார்ச் 26 : நியூசிலாந்து எதிர் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 26 : இங்கிலாந்து எதிர் இலங்கை

மார்ச் 27 : மேற்கிந்திய தீவுகள் எதிர் ‘பி’ பிரிவில் முதலிடம் பெறும் அணி

மார்ச் 27 : இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

மார்ச் 28 : தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை

மார்ச் 30 : 1வது அரையிறுதிப் போட்டி

மார்ச் 31 : 2வது அரையிறுதிப் போட்டி

ஏப்ரில் 03 : இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியனான அணிகள்

2007 – சம்பியன் : இந்தியா, 2ஆம் இடம் : பாகிஸ்தான்

2009 – சம்பியன் : பாகிஸ்தான் , 2ஆம் இடம் : இலங்கை

2010 – சம்பியன் : இங்கிலாந்து, 2ஆம் இடம் : அவுஸ்ரேலியா

2012 – சம்பியன் : மேற்கிந்திய தீவுகள், 2ஆம் இடம் : இலங்கை

2014 – சம்பியன் : இலங்கை , 2ஆம் இடம் : இந்தியா 

டி20 உலகக் கிண்ண சாதனைகள்

அணிகளின் சாதனை

– அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி – இலங்கை (260/6) கென்யா அணிக்கெதிராக

– ஆகக் குறைந்த ஓட்டங்களைப் பெற்ற அணி – நெதர்லாந்து (39/10) இலங்கை அணிக்கெதிராக

– மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அணி  – இலங்கை (172 ஓட்டங்களால் கென்யா அணிக்கெதிராக)

– அதிக வெற்றிகளைப் பெற்ற அணி – இலங்கை (21 போட்டிகளில்)

துடுப்பாட்ட  சாதனை

– அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் – மஹேல ஜயவர்தன (1016 ஓட்டங்கள்)

– தனி நபரால் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்கள் – ப்ரெண்டன் மெக்கலம் (123 ஓட்டங்கள்)

– அதிக துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட வீரர் – விராத் கொஹ்லி (72.00)

– அதிக அரைச் சதங்களைப் பெற்ற வீரர் – க்றிஸ் கெயில் – (8 அரைச் சதங்கள்)

– அதிக 6 ஓட்டங்களைப்  பெற்ற வீரர் – க்றிஸ் கெயில் – (49 – 6 ஓட்டங்கள்)

– பெரிய இணைப்பாட்டம் – 166 ஓட்டங்கள் – குமார் சங்கக்கார மற்றும் மஹேல  ஜயவர்தன ஆகியோருக்கு இடையில்

பந்துவீச்சு  சாதனை

– அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய வீரர் – லசித் மலிங்க (38 விக்கட்டுகள்)

– ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சுப் பிரதி – அஜந்த மென்டிஸ் (8/6)

– அதிக பந்துவீச்சு சராசரியைக் கொண்ட வீரர் – அஜந்த மென்டிஸ் (15.02)

 

களத்தடுப்பு  சாதனை

– அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் – எ. பி. டி விலியர்ஸ் (21 பிடியெடுப்புகள்)

– ஒரு போட்டியில் அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் – டெரன் சமி (04 பிடியெடுப்புகள்)

 

தனி நபர் சாதனை

– அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் – திலகரத்ன டில்ஷான் (31 போட்டிகள்)

– அதிக போட்டிகளில் தலைவராக செயற்பட்ட வீரர் – மஹேந்திர சிங் டோனி (28 போட்டிகள்)

– அதிக போட்டிகளில் நடுவராக செயற்பட்ட நடுவர் – அலீம் டார் (29 போட்டிகள்)