விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை வீரர்களின் உடற்தகுதி குறித்து எழுப்பியிருந்த விமர்சனங்கள் தற்போது பூதாகரமாக சென்று கொண்டிருக்கையில், அது தொடர்பான தனது கருத்தினை நேற்றைய (28) ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர், தான் வெளியிட்டிருந்த வீரர்களின் உடற்தகுதி தொடர்பான விமர்சனங்கள் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறித்து தெரிவித்தது அல்ல எனவும் ஊடகங்கள் தனக்கும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவுக்கும் இடையில் பகைமையை தோற்றுவிக்க முயல்வதாகத் தெரிவித்திருந்தார்.

மாலிங்கவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைத் தீர்ப்பு வெளியாகியது

எனக்கு எந்த தனிப்பட்ட வீரர் மீதும் கோபம் கிடையாது. எனது விமர்சனமானது முழு அணியினையும் குறித்ததாகவே இருந்தது. அதற்கு காரணம் அவர்களது உடற்தகுதி கேள்விக்குரியானதாக காணப்பட்டிருந்ததே, என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன”

என அமைச்சர் ஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாலிங்க மீதான நடவடிக்கையினை இலங்கை கிரிக்கெட் வாரியமே மேற்கொண்டிருந்ததாகவும், அதற்கு தான் காரணமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மாலிங்க மீது, எந்த நடவடிக்கையினையும் நான் எடுத்திருக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியமே (SLC) அவரது விமர்சனத்திற்காக அவர் மீது நடவடிக்கைகள் எடுத்திருந்தது.என்றார்.

மேலும், மாலிங்க போன்ற வீரர்கள் குறைவான ஓவர்கள் வீசப்படும் போட்டிகளில் விளையாடும் முக்கிய வீரர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், அவ்வாறான வீரர்கள் மைதானத்திற்கு அப்பால் செய்யும் தவறுகளை தவிர்த்து போட்டிகளில் திறமையினை வெளிக்கொணர வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மாலிங்க இருக்கும் வீரர்களில் மிகவும் திறமையானவர், அதோடு இலங்கை அணிக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த வீரர்களில் ஒருவர். அவர் போட்டித்தடைகளை பெறுவதற்கு கிட்டவாக நெருங்கியிருந்தார். எனினும் நான் அவ்வாறு இடம்பெறுவதை விரும்பவில்லைஎன்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் இறுதியாக, சிறந்த சர்வதேச வீரர் ஒருவரை உருவாக்க விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியில் கரிசனைகள் காட்டப்படுவதன் முக்கியத்துவத்தினை விளக்கியிருந்ததுடன், வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் விளையாட்டு அமைச்சும் அதில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் என்றார்.

மேலும், அவர்களது உடற்தகுதியினை சரிசெய்ய நாங்கள் மூன்று மாத கால அவகாசம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தா