பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த நிக் போதஸ் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நிக் போதஸ் பங்களாதேஷ் அணியுடன் கடந்த 2023ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருவதுடன், இந்த ஆண்டு சம்பியன்ஷ் கிண்ணம் வரை இவருடைய ஒப்பந்தம் நீடிக்கப்பட்டிருந்தது.
>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் அன்ட்ரிச் நோர்கியே<<
எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக நிக் போதஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் அறிவித்துள்ளது.
நிக் போதஸ் இலங்கை, மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்ததுடன், இந்த அணிகளின் உதவி மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அண்மையில் மொஹமட் சலாவூதினை உதவி பயிற்றுவிப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<