டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வீரருக்கு உபாதை!

Indian Premier League 2024

60
Mitchell Marsh

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஷ் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிச்சல் மார்ஷிற்கு தற்போது ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அவரால் குறைந்தது ஒரு வாரத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க

அதுமாத்திரமின்றி உடற்கூறு நிபுனரின் அறிக்கையை தொடர்ந்து அவர் இம்முறை தொடரில் முழுமையாக விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மிச்சல் மார்ஷ் ஆரம்ப போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடியிருந்தாலும், பிரித்வி ஷோவின் வருகையின் பின்னர் இரண்டாமிலக்க வீரராக களமிறக்கப்பட்டார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். 

மிச்சல் மார்ஷின் உபாதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் மிகப்பெரும் பின்னடைவாக மாறுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இம்முறை நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டும் இவருடைய உபாதை தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது. 

இதேவேளை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் மற்றுமொரு வீரரான குல்தீப் யாதவும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<