Home Tamil இன்னிங்ஸ் வெற்றியுடன் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

இன்னிங்ஸ் வெற்றியுடன் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

New Zealand tour of Sri Lanka 2024 - 2nd Test

30
New Zealand tour of Sri Lanka 2024 - 2nd Test

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

>>இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து<<

மேலும் இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் இலங்கை 2-0 எனக் கைப்பற்றியிருப்பதோடு, நியூசிலாந்தையும் டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்திருக்கின்றது 

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்படும் போது இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன் முறையில் துடுப்பாடி வந்த நியூசிலாந்து 41 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுடன் காணப்பட்டது 

நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 315 ஓட்டங்கள் மேலதிகமாக தேவையாக காணப்பட, அவ்வணிக்கு களத்தில் நின்று நம்பிக்கை தந்த டொம் பிலன்டல் 47 ஓட்டங்களுடனும், கிளன் பிலிப்ஸ் 32 ஓட்டங்களுடனும் இருந்தனர்.   

இன்று (29) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த நியூசிலாந்து அணி போட்டி தொடங்கி சிறிது நேரத்தில் டொம் பிலன்டலின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. அரைச்சதம் பெற்ற பிலன்டல் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார் 

>>இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இருதரப்பு தொடர் அட்டவணை வெளியீடு<<

இதனையடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் மிச்சல் சான்ட்னர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராடிய போதிலும் அவர்களது ஆட்டம் வீணாக 81.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நியூசிலாந்து தரப்பானது 360 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது 

நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் கிளன் பிலிப்ஸ் 78 ஓட்டங்களையும், மிச்சல் சான்ட்னர் 67 ஓட்டங்களையும் பெற்றனர் 

இலங்கைப் பந்துவீச்சு சார்பில் நிஷான் பீரிஸ் 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களை சுருட்டினார் 

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பிரபாத் ஜயசூரிய வெல்ல, தொடர் நாயகனாக கமிந்து மெண்டிஸ் தெரிவானார். 

Result


Sri Lanka
602/5 (163.4)

New Zealand
88/10 (39.5) & 360/10 (81.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tom Blundell b Tim Southee 1 3 0 0 33.33
Dimuth Karunaratne run out (Tom Latham) 46 109 4 0 42.20
Dinesh Chandimal b Glenn Phillips 116 208 15 0 55.77
Angelo Mathews c William O’Rourke b Glenn Phillips 88 185 7 0 47.57
Kamindu Mendis not out 182 250 16 4 72.80
Dhananjaya de Silva c Tom Blundell b Glenn Phillips 44 80 3 1 55.00
Kusal Mendis not out 106 149 6 3 71.14


Extras 19 (b 6 , lb 8 , nb 2, w 3, pen 0)
Total 602/5 (163.4 Overs, RR: 3.68)
Bowling O M R W Econ
Tim Southee 19 1 70 1 3.68
William O’Rourke 17 1 81 0 4.76
Ajaz Patel 41 5 135 0 3.29
Mitchell Santner 33 5 82 0 2.48
Glenn Phillips 38 4 141 3 3.71
Rachin Ravindra 12.4 0 54 0 4.35
Daryl Mitchell 3 0 25 0 8.33
Batsmen R B 4s 6s SR
Tom Latham c Pathum Nissanka b Asitha Fernando 2 5 0 0 40.00
Devon Conway c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 9 21 0 0 42.86
Kane Williamson c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 7 53 0 0 13.21
Ajaz Patel lbw b Nishan Peiris 8 41 0 0 19.51
Rachin Ravindra b Nishan Peiris 10 25 1 0 40.00
Daryl Mitchell c Angelo Mathews b Prabath Jayasuriya 13 15 1 1 86.67
Tom Blundell c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Glenn Phillips c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 0 2 0 0 0.00
Mitchell Santner b Nishan Peiris 29 51 4 1 56.86
Tim Southee c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 2 6 0 0 33.33
William O’Rourke not out 2 15 0 0 13.33


Extras 5 (b 5 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 88/10 (39.5 Overs, RR: 2.21)
Bowling O M R W Econ
Asitha Fernando 4 1 8 1 2.00
Nishan Madushka 17.5 3 33 3 1.89
Prabath Jayasuriya 18 6 42 6 2.33


Batsmen R B 4s 6s SR
Tom Latham c Pathum Nissanka b Nishan Peiris 0 6 0 0 0.00
Devon Conway c Dinesh Chandimal b Dhananjaya de Silva 61 62 10 1 98.39
Kane Williamson c Ramesh Mendis b Nishan Peiris 46 58 4 0 79.31
Rachin Ravindra b Nishan Peiris 12 24 1 0 50.00
Daryl Mitchell c Pathum Nissanka b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Tom Blundell lbw b Nishan Peiris 60 64 6 2 93.75
Glenn Phillips c Dimuth Karunaratne b Nishan Peiris 78 99 6 3 78.79
Mitchell Santner st Kusal Mendis b Nishan Peiris 67 115 6 3 58.26
Tim Southee b Prabath Jayasuriya 10 10 1 1 100.00
Ajaz Patel b Prabath Jayasuriya 22 40 3 1 55.00
William O’Rourke not out 0 7 0 0 0.00


Extras 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total 360/10 (81.4 Overs, RR: 4.41)
Bowling O M R W Econ
Nishan Peiris 33.4 4 170 6 5.09
Prabath Jayasuriya 34 2 139 3 4.09
Asitha Fernando 5 1 14 0 2.80
Milan Rathnayake 2 0 7 0 3.50
Dhananjaya de Silva 7 0 28 1 4.00




  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<