இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இருதரப்பு தொடர் அட்டவணை வெளியீடு

West Indies Tour of Sri Lanka 2024

48
West Indies Tour of Sri Lanka 2024

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I சர்வதேச தொடருக்கான போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் சபையினால் நேற்று (27) வெளியிடப்பட்டது.

இலங்கைக்கு ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் T20I தொடர் முதலாவதாக இடம்பெறவிருப்பதோடு, அது ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

மறுமுனையில் T20I தொடரினை அடுத்து ஒருநாள் தொடர் ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இருதரப்பு சுற்றுத் தொடர் அட்டவணை

  • முதல் T20I போட்டி – ஒக்டோபர் 13 – ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • இரண்டாவது T20I போட்டி – ஒக்டோபர் 15 – ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • மூன்றாவது T20I போட்டி – ஒக்டோபர் 17 – ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • முதல் ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 20 – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 23 – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 26 – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<