கிராண்ட்ஹோமேவின் துடுப்பாட்டத்தை பாராட்டும் நியூசிலாந்து அணித்தலைவர்

68
 

நேற்று (3) கண்டி பல்லேகல மைதானத்தில் நிறைவுக்கு வந்த இலங்கை அணியுடனான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கைப்பற்றியிருக்கின்றது. 

நியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இலங்கை

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை ……..

T20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது அரைச்சதத்தினை பெற்றுக்கொண்ட கொலின் டி கிராண்டோம் மூலமே நியூசிலாந்து அணியின் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியிலும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த டி கிராண்டோம், இரண்டாவது T20 போட்டியில் 46 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

அவர் (கிராண்டோம்) இதுவரையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் மிதமிஞ்சிய ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் காட்டிய சிறந்த ஆட்டத்தினை தொடர்ந்து எடுத்துவந்து  இங்கே சிறந்த கிரிக்கெட் விளையாட்டினை விளையாடுகின்றார்.” என நியூசிலாந்து அணியின் தலைவர் டிம் சௌத்தி, கொலின் கிராண்டோமின் சிறந்த துடுப்பாட்டம் பற்றி போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

”அவரினால் பந்தினை அழகாக அடிக்க முடிகின்றது. அவர் நாம் சற்று தடுமாற்றத்தில் இருக்கும் போது வந்திருந்தார். அவர் சமார்த்தியமான முறையில் ஏனைய துடுப்பாட்ட வீரருடன் இணைந்து சிறந்த இன்னிங்ஸ் ஒன்றினை கட்டியெழுப்பியிருந்தார்.” என டிம் சௌத்தி மேலும் கிராண்டோம் பற்றி தெரிவித்திருந்தார்.   

கொலின் டி கிராண்டோமின் துடுப்பாட்ட ஜோடியாக இருந்த டொம் ப்ரூஸ் அரைச்சதம் பெற்று நியூசிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த ஏனைய துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். டொம் ப்ரூஸும் அவரின் இரண்டாவது T20 அரைச்சதத்தோடு மொத்தமாக 53 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ……

இதேநேரம், டிம் சௌத்தி இலங்கை அணியுடனான T20 தொடரினை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருக்கின்றது எனவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.  

”வித்தியாசமான நிலைகளில் இருக்கும் வீரர்கள் வித்தியாசமான வேளைகளில் ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பட்டிருக்கின்றனர். இதில் பலர் அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாது இந்த மட்டத்திற்கு வந்திருக்கின்றனர். எனவே, இது மகிழ்ச்சியாக உள்ள விடயமாக உள்ளது. அதோடு, இது எமது அணி சிறந்த தரப்பாக உள்ளது என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.”

அதோடு உபாதை ஒன்றினால், இலங்கை அணியுடனான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஆடாது போயிருந்த ரொஸ் டெய்லர் மூன்றாவது T20 போட்டிக்கு பூரண உடற்தகுதியுடன் இருப்பார் எனவும் டிம் சௌத்தி கூறியிருந்தார்.  

இலங்கை அணியுடனான T20 தொடரினை கைப்பற்றியுள்ள நியூசிலாந்து அணி, இந்த T20 தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி வெள்ளிக்கிழமை (5) விளையாடவுள்ளது. T20 தொடரின் கடைசிப் போட்டியும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<