நியூசிலாந்தை 3-0 என வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலியா!

57

சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 279 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 3-0 என வைட்வொஷ் செய்து வெற்றிக்கொண்டது. 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் அவுஸ்திரேலிய அணி வெற்றிக்கொண்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டி கடந்த 3ம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ………….

அவுஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வரும் மார்னஸ் லெபுச்சங் தனது கன்னி இரட்டைச் சதத்தை கடக்க, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மார்னஸ் லெபுச்சங் 215 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஸ்டீவ் ஸ்மித் 63 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் நெயில் வெங்கர் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு அணித் தலைவர் டொம் லேத்தம் மற்றும் கிளேன் பிலிப்ஸ் ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், அந்த அணி 256 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

கேன் வில்லியம்ஸனுக்கு பதிலாக அணிக்கு வருகைத்தந்த கிளேன் ப்லிப்ஸ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டொம் லேத்தம் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஆஸி. அணியின் பந்துவீச்சில் நேதன் லையன் 5 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து  அணியின் இன்னிங்ஸின் பின்னர் 198 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸி. அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றதுடன், நியூசிலாந்து அணிக்கு 416 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மார்னஸ் லெபுச்சங் 59 ஓட்டங்களையும், ஜோ பேர்ன்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். 

இதன்படி, கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நேதன் லையனின் சுழல் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 136 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டது. இதில், மெட் ஹென்ரி உபாதை காரணமாக துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.

நியூசிலாந்து  அணியின் துடுப்பாட்டத்தில் கொலின் டி கிரெண்டோம் மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தனர். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் நேதன் லையன் 5 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான இர்பான் பதான் இன்று (04) தனது 35ஆவது வயதில்……….

இதன் அடிப்படையில் இந்த வருடத்தின் முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை அவுஸ்திரேலிய அணி தம்வசப்படுத்தியுள்ளதுடன், தொடரையும் 3-0 என வைட்வொஷ் முறையில் கைப்பற்றியது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 296 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. 

போட்டி சுருக்கம்

அவுஸ்திரேலியா – 454/10, மார்னஸ் லெபுச்சங் 215, ஸ்டீவ் ஸ்மித் 63, நெயில் வெங்கர் 66/3, கொலின் டி கிரெண்டோம் 78/3

நியூசிலாந்து – 256/10, க்ளேன் ப்லிப்ஸ் 52, டொம் லேத்தம் 49, நெதன் லையன் 68/5, பெட் கம்மின்ஸ் 44/3

அவுஸ்திரேலியா (2வது இன்னிங்ஸ்) – 217/2d, டேவிட் வோர்னர் 111*, மார்னஸ் லெபுச்சங் 59, ஜோ பேர்ன்ஸ் 40, மெட் ஹென்ரி 54/1, டொட் எஸ்ட்ல் 41/1

நியூசிலாந்து (2வது இன்னிங்ஸ்) – 136/10, கொலின் டி கிரெண்டோம் 52, ரொஸ் டெய்லர் 22, நெதன் லையன் 50/5, மிச்சல் ஸ்டார்க் 25/3

முடிவு – அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<