இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

3667
©Blackcaps Twitter

மயிரிழையில் உலகக் கிண்ணத்தை இழந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கிண்ண தொடருக்கு பின்னரான தங்களுடைய கிரிக்கெட் பயணத்தை இலங்கை அணியுடன் ஆரம்பிக்கின்றது. இருதரப்பு தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது. 

அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை ………

அடுத்த மாதம் 2ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக தங்களுடைய டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கின்றது. அதேபோன்று, இலங்கை அணியும் குறித்த தொடர் மூலமாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கின்றது. டெஸ்ட் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது.   

இந்நிலையில், இருதரப்பு தொடரில் முதலில் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் நியூசிலாந்து அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் கேன் வில்லியம்சன் பெயரிடப்பட்டுள்ளார்

இலங்கை அணியை எதிர்கொள்வதற்கான குறித்த குழாமில் நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 2018 நவம்பரில் டெஸ்ட் அறிமுகம் பெற்று 2018 டிசம்பரில் இறுதியாக இலங்கை அணியுடன் விளையாடிய இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் மீண்டும் இலங்கையுடன் விளையாடுவதற்கு குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்

இலங்கை அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறிய அவிஷ்க

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் ………..

கடந்த உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒரேயொரு சுழற் பந்துவீச்சாளரான மிட்செல் சேன்ட்னர் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக இறுதியாக 2017 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் ஒன்றரை வருடங்களின் பின்னர் தற்போது அணிக்குத் திரும்புகின்றார். 

மேலும், குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள ஏனைய சுழற் பந்துவீச்சாளர்களாக இலங்கையில் வைத்து டெஸ்ட் அறிமுகம் பெற்ற 32 வயதுடைய டொட் அஸ்டில் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் கன்னி டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள வில்லியம் சொமர்விலீ ஆகியோர் காணப்படுகிறனர்.  

இங்கிலாந்தின் ஆஷஷ் குழாமில் இடம்பிடித்தார் ஜொப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு ………

2017 டிசம்பரில் டெஸ்ட் அறிமுகம் பெற்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் இருந்த 28 வயதுடைய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் டொம் ப்ளுன்டெல் ஒன்றரை வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி, நைல் வேக்னர் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி கிரேன்ட்ஹோம் ஆகியோர் குழாமில் உள்டக்கப்பட்டுள்ளனர்.  

டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ஜீட் றாவல், ரோஸ் டைலர், கொலின் டி கிரேன்ட்ஹோம், டொட் அஸ்டில், வில்லியம் சொமர்விலீ, மிட்செல் சேன்ட்னர், டொம் ப்ளுன்டெல், டொம் லேதம், ஹென்றி நிக்கொலஸ், பி.ஜே வெட்லிங், ட்ரெண்ட் போல்ட், அஜஸ் படேல், டிம் சௌத்தி, நைல் வேக்னர்

இருதரப்பு தொடர் அட்டவணை

  • ஆகஸ்ட் 14 முதல் 18 – முதலாவது டெஸ்ட் போட்டிகாலி 
  • ஆகஸ்ட் 22 முதல் 26 – இரண்டாவது டெஸ்ட் போட்டிகொழும்பு 
  • ஆகஸ்ட் 31 – முதலாவது டி20 சர்வதேச போட்டிகொழும்பு  
  • செப்டம்பர் 2 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டிகொழும்பு 
  • செப்டம்பர் 6 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டிகண்டி  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<