ககிஸோ றபாடாவினை இழக்கும் டெல்லி கெபிடல்ஸ் அணி

31

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ றபாடா தற்போது நடைபெற்று வருகின்ற IPL T20 தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்!

IPL T20 தொடரில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ககிஸோ அவ்வணிக்காக 11 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் றபாடாவிற்கு தசையிழைய தொற்று ஏற்பட்டிருப்பதன் காரணமாகவே IPL தொடரில் இருந்து தீடிரென விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

ககிஸோ றபாடா விலகியதன் காரணமாக அவர் பஞ்சாப் கிங்ஸ் அணி IPL T20 தொடரில் விளையாடவிருக்கும் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பினை இழக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

எனினும் ககிஸோ றபாடா T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பூரண உடற்தகுதியினைப் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தென்னாபிரிக்க அணி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது 

தென்னாபிரிக்க அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரில் தம்முடைய முதல் போட்டியில் இலங்கை வீரர்களை ஜூன் மாதம் 03ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<