T20i தரவரிசையில் மிகப் பெரிய மாற்றங்கள்

88

இந்தியா – தென்னாபிரிக்கா T20i தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண T20i தொடர் மற்றும் அயர்லாந்து முக்கோண T20i தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் பிரகாசித்த வீரர்களை உள்ளடக்கிய புதிய T20i வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.    

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை 

சமநிலையில் நிறைவுக்குவந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான T20i தொடரில் இரண்டு போட்டிகளிலும் இரு அரைச்சதங்களுடன் தொடர் நாயகன் விருதை வென்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் 19 நிலைகள் முன்னேறி 30ஆவது இடத்தை பிடித்துள்ளார்

2020 ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி

உலகக் கிண்ண டி-20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணி…

ஒரு அரைச்சதத்துடன் தொடரில் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு நிலை முன்னேறி 11ஆவது இடத்திற்கு வந்துள்ளார். அத்துடன் தொடரில் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சிகர் தவான் 3 நிலைகள் உயர்ந்து 13ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும், தொடரில் பெரிதாக பிரகாசிக்காத  ரோஹிட் சர்மா ஒரு நிலை உயர்ந்து 8ஆவது இடத்தை அடைந்துள்ளார்

பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு T20 தொடரில் நான்கு போட்டிகளில் ஒரு அரைச்சதத்துடன் மொத்தமாக 133 ஓட்டங்களை பெற்று, முழு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்த ஜிம்பாப்வேயின் ஹமில்டன் மஸகட்ஸா, ஜிம்பாப்வே அணி சார்பாக அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்ற வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவர் 576 தரவரிசை புள்ளிகளுடன் 22ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்

மேலும், முக்கோண T20 சர்வதேச தொடரில் மொத்தமாக 92 ஓட்டங்களை குவித்த ஹஸ்ரதுல்லாஹ் ஷஷாய் 727 தரவரிசை புள்ளிளை பெற்று தொடர்ந்தும் ஐந்தாவது இடத்தில் காணப்படுவதுடன், T20i தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்ற வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

தொடரில் ஒரு அரைச்சதத்துடன் மூன்றாவது அதிகூடிய ஓட்டமாக 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் நபி 2 நிலைகள் உயர்ந்து 27ஆவது இடத்திற்கும், 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சகீப் அல் ஹசன் 5 நிலைகள் உயர்ந்து 32ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்

சீரற்ற காலநிலையால் மாற்றம் செய்யப்பட்ட இலங்கை – பங்களாதேஷ் A தொடர்

சுற்றுலா பங்களாதேஷ் A அணிக்கும் இலங்கை A அணிக்குமிடையில் ஆரம்பமாகவிருந்த உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடரானது …

அயர்லாந்து முக்கோண T20 தொடரில் அதிரடியாக பெற்ற சதத்துடன் தொடரில் மொத்தமாக 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்கொட்லாந்து அணியின் வீரர் ஜோர்ஜ் முன்ஸி 15 நிலைகள் உயர்ந்து 21ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் 600 தரவரிசை புள்ளிகளை பெற்றுக்கொண்ட முதல் ஸ்கொட்லாந்து வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

ஒரு அரைச்சதத்துடன் தொடரில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாக 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்கொட்லாந்து வீரர் ரிச்சி பெரிங்டன் 6 நிலைகள் உயர்ந்து 28ஆவது இடத்தையும், நெதர்லாந்து வீரர்களான பென் கூப்பர் மற்றும் மெக்ஸ் ஓடௌட் ஆகியோர் 41ஆவது நிலைக்கும், அயர்லாந்து வீரர் கெவின் பிரைன் 47ஆவது நிலைக்கும் உயர்ந்துள்ளனர். மேலும் இவர்கள் நால்வரும் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை 

பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண டி20 தொடரில் ஒரு போட்டியில்  நான்கு விக்கெட்டுடன் தொடரில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் 18 வயதுடைய இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான்  பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள்  நுழைந்துள்ளார்

திடீரென 29 நிலைகள் உயர்ந்த அவர் 652 தரவரிசை புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 9ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் பந்துவீச்சில் பிரகாசிக்காததன் காரணமாக ஒரு நிலை பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், தென்னாபிரிக்காவின் அண்டில் பெஹ்லுக்வாயோ 2 நிலைகள் உயர்ந்து 7ஆவது இடத்தை அடைந்துள்ளார்

இலங்கை இராணுவத்தில் இணைகிறார் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவப்படையின் சிப்பாய்களில்….

தென்னாபிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் குழாமில் இடம்பெறத் தவறிய வேகப் பந்துவீச்சாளர் புவ்னேஸ்வர் குமார் புதிய தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதன் காரணமாக இலங்கையின் வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க ஒரு நிலை உயர்ந்து 20ஆவது இடத்திற்கு நுழைந்துள்ளார்

மேலும், இந்திய அணியுடனான தொடரில் சிறந்த பந்துவீச்சு பிரதியுடன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரிஸ் ஷம்ஷி 13 நிலைகள் உயர்ந்து லசித் மாலிங்கவுடன் 20ஆவது இடத்தில் காணப்படுகின்றார். அத்துடன் இறுதி T20i போட்டியில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் பங்காற்றியிருந்த பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 36 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் (447) 55ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.  

இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அலஸ்டயர் எவன்ஸ் (ஸ்கொட்லாந்து) வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 24ஆவது நிலைக்கும், சேன் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) 43ஆவது நிலைக்கும், வெஷிங்டன் சுந்தர் 50ஆவது நிலைக்கும், துடுப்பாட்டத்தை போன்று பந்துவீச்சிலும் பிரகாசித்த ரிச்சி பெரிங்டன் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் 53ஆவது நிலைக்கும், ககிஸோ ரபாடா 57ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளனர்.   

இதேவேளை, தொடரில் மொத்தமாக 4 விக்கெட்டுக்களையும், 145 ஓட்டங்களையும் குவித்து சகலதுறையிலும் கலக்கிய ஸ்கொட்லாந்தின் ரிச்சி பெரிங்டன் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார். 2 நிலைகள் உயர்ந்த அவர் வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் (253) 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

Batsmen (top 10)

Rank (+/-) Player Team Pts Avge S/R Highest rating
   1 ( – ) Babar Azam Pak 896! 54.21 129 896 v Eng at Cardiff 2019
2 ( – ) G Maxwell Aus 815 ! 34.4 158 815 v India at Bengaluru 2019
3 ( – ) Colin Munro NZ 796 31.91 161 830 v Pak at Dubai 2018
4 ( – ) Aaron Finch Aus 782 37.13 156 900 v Zim at Harare 2018
5 ( – ) H Zazai Afg 727*! 52.22 173 727 v Ban at Chittagong 2019
6 ( – ) D’Arcy Short Aus 715* 32.88 121 756 v UAE at Abu Dhabi 2018
7 (+1) Fakhar Zaman Pak 681 25.79 139 842 v Aus at Harare 2018
8= (+2) Alex Hales Eng 664 31.01 137 866 v India at Edgbaston 2014
(+1) Rohit Sharma India 664 32.14 137 718 v WI at Lucknow 2018
10 (-3) Lokesh Rahul India 662 42.8 148 854 v Eng at Old Trafford 2018


Other selected rankings

Rank (+/-) Player Team Pts Avge S/R Highest rating
11 (+1) Virat Kohli India 659 50 135 897 v Eng at Edgbaston 2014
13 (+3) S Dhawan India 639 27.7 130 685 v NZ at Auckland 2019
21 (+15) G Munsey Sco 585 30.12 159 600 v Net at Malahide 2019
27 (+2) M Nabi Afg 554 23.05 147 569 v Ban at Mirpur 2019
28 (+6) R Berrington Sco 542! 28.67 128 542 v Ire at Malahide 2019
30 (+19) Q de Kock SA 540 30.84 129 631 v WI at Nagpur 2016
 32= (+5) S Al Hasan Ban 536 23.74 124 618 v Pak at Mirpur 2015
 41= (+5) Ben Cooper Net 485 26.1 125 494 v Ire at Malahide 2019
(+16) Max O’Dowd Net 485* 26.65 128 501 v Ire at Malahide 2019
47 (+15) Kevin O’Brien Ire 459! 19.21 128 459 v Sco at Malahide 2019


Bowlers (top 10)

Rank (+/-) Player Team Pts Avge Eco Highest rating
1 ( – ) Rashid Khan Afg 757 12.03 6.13 816 v Ban at Dehradun 2018
2 ( – ) Imad Wasim Pak 710 19.53 5.81 780 v WI at Trinidad 2017
3 ( – ) Shadab Khan Pak 706 18.59 6.84 769 v Sco at Edinburgh 2018
4 ( – ) Adil Rashid Eng 702 24.86 7.33 716 v WI at St Kitts 2019
5 ( – ) M Santner NZ 673 20.71 7.1 731 v Pak at Wellington 2018
6 ( – ) Adam Zampa Aus 672! 19.43 6.04 672 v India at Bengaluru 2019
7 (+2) A Phehlukwayo SA 668 18.96 7.87 669 v India at Mohali 2019
8 (-1) S Al Hasan Ban 663 20.57 6.81 672 v Pak at Mirpur 2014
9 (+29) M Ur Rahman Afg 652*! 15.44 5.56 652 v Ban at Chittagong 2019
10 ( – ) Faheem Ashraf Pak 641 21.91 7.35 659 v SA at Cape Town 2019


Other selected rankings

Rank (+/-) Player Team Pts Avge Eco Highest rating
20= (+1) Lasith Malinga SL 592 19.02 7.22 684 v WI at Colombo (RPS) 2015
(+13) T Shamsi SA 592*! 35.66 7.5 592 v India at Bengaluru 2019
 24= (+5) Alasdair Evans Sco 577 17.96 7.13 598 v Net at Malahide 2019
43 (+8) Sean Williams Zim 486 30.53 7.28 506 v Afg at Nagpur 2016
50 (+8) W Sundar India 476* 22.33 6.23 496 v Ban at Colombo (RPS) 2018
53 (+10) R Berrington Sco 467 22.36 7.2 477 v Net at Malahide 2019
54 (-1) Rohan Mustafa UAE 459 21.07 7.12 468 v Net at The Hague 2019
55 (+36) B Hendricks SA 447*! 17.61 8.3 447 v India at Bengaluru 2019
56 (-2) Mahmudullah Ban 437 27.45 7.28 495 v Pak at Mirpur 2014
 57= (+9) Kagiso Rabada SA 435 23.14 8.37 595 v WI at Nagpur 2016


All-rounders (top five)

Rank (+/-) Player Team Pts Highest rating
1 ( – ) Glenn Maxwell Aus 390 395 v Eng at Melbourne 2018
2 ( – ) S Al Hasan Ban 355 408 v Pak at Mirpur 2015
3 ( – ) M Nabi Afg 339 355 v Ban at Mirpur 2019
4 (+2) R Berrington Sco 253! 253 v Ire at Malahide 2019
5 (-1) Mahmudullah Ban 234 244 v Zim at Chittagong 2019

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<