கோல்ட்ஸ் அணிக்கு கைகொடுத்த பிரியமால் பெரேராவின் சதம்

38

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் ப்ரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் இன்று (11) ஆரம்பமாகின.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

பிரியமால் பெரேரா ஆட்டமிழக்காமல் பெற்ற சதத்தின் மூலம் BRC அணிக்கு எதிராக கோல்ட்ஸ் அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது.

போராட்டத்தின் பின் T20I தொடரையும் இழந்த இலங்கை

கொழும்பு, BRC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் கோல்ட்ஸ் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 272 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Photo Album : BRC v Colts | Major League Tier A Tournament 2018-2019

வலதுகை துடுப்பாட்ட வீரரான பிரியமால் பெரேரா ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றுள்ளார். பெரேரா கடைசியாக நடந்த பதுரெலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 206 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 272/9 (93) – பிரியமால் பெரேரா 110*, நிஷான் மதுஷ்க 46, ஹஷான் துமிந்து 42, திலகரத்ன சம்பத் 6/56, துவிந்து திலகரத்ன 2/90


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

ரமேஷ் மெண்டிஸின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழகம் வலுவான ஓட்டங்களை பெற்றுள்ளது. தமிழ் யூனியன் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடும் சோனகர் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ஓட்டங்களை எடுத்துள்ளது. ரமேஷ் மெண்டிஸ் 75 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 324/9 (94) – ரமேஷ் மெண்டிஸ் 75*, சாமர சில்வா 43, சரித் குமாரசிங்க 36, நிமன்த மதுஷங்க 35, அயன சிறிவர்தன 31, ஜீவன் மெண்டிஸ் 5/119, தமித் சில்வா 3/59


இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

பனாகொட, இராணுவ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வரும் இராணுவப்படை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறப்பாக துடுப்பாடும் துஷான் விமுக்தி 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 204/4 (83.3) – துஷான் விமுக்தி 57*, லக்ஷித்த மதுஷான் 42, லக்‌ஷான் எதிரிசிங்க 38, சஞ்ஜிக ரித்ம 31*, அமில அபொன்சோ 2/51

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

இலங்கை துறைமுக அதிகாரசபை CC எதிர் NCC

துறைமுக அதிகாரசபையின் சிறப்பாக பந்துவீச்சின் மூலம் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் NCC முதல் இன்னிங்ஸில் 218 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களுடன் ஸ்திரமான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 218 (59.1) – மாலிங்க அமரசிங்க 54, சமித் ரங்கன 42, சத்துரங்க டி சில்வா 39, சமிந்த பண்டார 3/55, அனுக் டி அல்விஸ் 2/11, இமேஷ் உதயங்க 2/52, சானக்க கோமசாரு 2/59

இலங்கை துறைமுக அதிகாரசபை (முதல் இன்னிங்ஸ்) –  84/1 (31) – பிரமோஷ் பெரேரா 43*, ரமேஷ் நிமன்த 23*


CCC எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

மொரட்டுவை டி சொய்ஸா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடும் CCC அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது. பதுரெலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது CCC அணி 7 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

CCC (முதல் இன்னிங்ஸ்) – 307/7 (84) – வனிந்து ஹசரங்க 82, மாதவ வர்ணபுர 59, லசித் அபேரத்ன 49, ரொன் சந்திரகுப்தா 36, மினோத் பானுக்க 27, மலிந்த மதுரங்க 20*, சச்சித் பத்திரன 3/120, புத்திக்க சஞ்சீவ 2/68  


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

மக்கொன, சர்ரே விலேஜ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது. 64 ஓவர்களுக்கு சுருங்கிய முதல் நாள் ஆட்டத்தில் நீர்கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 215/9 (64) – ஷெஹான் ஜயசூரிய 62, லசித் கிரூஸ்புள்ளே 56, அஞ்செலோ ஜயசிங்க 30*, சாமிக்கர எதிரிசிங்க 3/50, ஹரீன் வீரசிங்க 2/29, சாலிய சமன் 2/30

அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<