உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராட்சியம் தகுதி

878

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதிலும், நேபாள அணி முதற்தடவையாக உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

10 அணிகளின் பங்குபற்றலுடன் இங்கிலாந்தில் அடுத்த வருடம் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. .சி.சியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து உள்ளடங்களாக முதல் 8 இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும்.

கிரிக்கெட் உலகை அபூர்வமாக்கிய ஆப்கான் – ஜிம்பாப்வே ஒரு நாள் தொடர்

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்…

எஞ்சியுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தெரிவு செய்யப்படும். இதன்படி, அண்மைக்கால ஒரு நாள் அரங்கில் மோசமாக விளையாடி வருகின்ற, உலகக் கிண்ணத்தை 2 தடவைகள் கைப்பற்றியிருக்கும் அணியான பிரபல மேற்கிந்திய தீவுகள், கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்ற ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அவரை தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த அணிகளுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடர் மூலம் தகுதிப் பெற்ற நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹொங்கொங் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட் டிவிஷன் 2 லீக்கில் சிறப்பாக விளையாடும் இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.

இதன்படி, .சி.சியின் உலக கிரிக்கெட் டிவிஷன் 2 போட்டிகள் நமீபியாவின் விந்தோக்கில் நேற்று நிறைவுக்கு வந்தன. இதன் கடைசி லீக் போட்டியில் நேபாளம், கனடா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணிக்காக விளையாடி வருகின்ற இலங்கையைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீமன்த விஜேரத்ன 103 ஓட்டங்களை குவித்தார்.

சிறப்பாக பந்துவீசிய நேபாளத்தின் ரெக்மி 3 விக்கெட்டுக்களையும், இம்முறை .பி.எல் தொடரில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யபட்ட 17 வயதான சந்தீப் லமிச்சான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

அடுத்து களமிறங்கிய நேபாள அணி 24.1 ஓவரில் 144 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நேபாளம் தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கரண் மற்றும் லமிச்சான் ஜோடி 51 ஓட்டங்களை இணைப்பாட்டாகப் பெற்று அந்த அணியை வெற்றி பெறச் செய்தனர்.  

இதன்படி, நேபாள அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக நேபாள அணி உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் நேபாளம் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றும், ஐக்கிய அரபு இராட்சிய அணி 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று தகுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஐக்கிய அரபு இராட்சிய அணி 2ஆவது தடவையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் பிரிவில் மேற்கிந்திய தீவுகள், நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும், பி பிரிவில் ஐக்கிய அரபு இராட்சியம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஹொங்காங் அணிகளும் உள்ளன. இந்த 10 அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 2019 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறும்.

இதேநேரம், உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளன.