ஸர்ஜீயோ அக்வேய்ரோவின் ஹட்ரிக் கோலினால் மென்சஸ்டர் சிடி முன்னிலையில்

120
Premiur League 5th
Image Source - Getty Images

பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்து இரண்டு மாதகாலங்கள் கடந்துள்ள நிலையில் இச்சுற்றுப்போட்டியின் ஜந்தாவது போட்டிகள் கடந்த வாரம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது. சுற்றுப் போட்டியை அதிரடியாக ஆரம்பித்த சில முக்கிய முன்னனி அணிகள், இவ்வார போட்டியில் பலத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன. மேலும் இவ்வாரத்திற்கான போட்டிகளிகன் பின்னர் புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளைப் பெற்று மென்சஸ்டர் சிடி கழகம் முன்னிலை வகிக்கின்றது.

16 ஆம் திகதி நடைபெற்ற 8 போட்டிகளில், 4 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. லிவர்பூல் கழகத்தின் அன்பீய்ல்ட் அரங்கில் நடைபெற்ற (Anfield Stadium) பர்ன்லீ (Burnley) கழகத்துடனான போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை லிவர்பூல் கழகத்தின் ஆதிக்கமே மைதானத்தில் அதிகளவு காணப்பட்டது. போட்டியின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி லிவர்பூல் கழகத்தால், பர்ன்லீ கழகத்தின் கோலை நோக்கி 35 தடவைகள் கோலைப் பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எனினும், போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழகத்தின் பின்களத்தில் விடப்பட்ட தவறை பயன்படுத்தி பர்ன்லீ அணியின் மத்தியகள வீரரான ரொபீ பெர்டி (Robbie Brady) மூலம் பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை சிறந்த முறையில் பெற்ற மத்தியகள வீரர் ஸ்கொட் ஆர்பீய்ல்ட் (Scott Arfield) தனது அணிக்கான முதல் கோலை பெற்று பர்ன்லீ அணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார்.

எனினும் பெறப்பட்ட கோலிற்காக பர்ன்லீ ஆதரவாளர்களால் அதிகளவு நேரம் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியவில்லை. உடனடியாக செயற்பட்ட லிவர்பூல் அணிக்கு போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் முகமட் ஸலாஹ் ஒரு கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார். அதனை தொடர்ந்து லிவர்பூல் அணி போட்டியை வெற்றி பெற இறுதிவரை கடுமையான முயற்சி எடுத்தது. அத்துடன் பர்ன்லீ அணிக்கு, லிவர்பூல் அணி சவால் விடுப்பதற்கான வாய்ப்புகள குறைவாகவே கிடைத்தாலும், அதனை முறையாக பயன்படுத்த தவறியதால் 1-1 என்ற கோல் அடிப்படையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. லிவர்பூல் அணியின் முக்கிய வீரரான ஸடியோ மனே (Sadio Mane) தான் பெற்ற மூன்று போட்டிகள் தடை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதே தினம் நடைபெற்ற ஹடர்ஸ்பீல்ட் (Huddersfield) மற்றும் லயர்ஸ்டர் சிடி (Leicester City) அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி தோல்யியின்றி நிறைவுற்றது. ஹடர்ஸ்பீல்ட் அணியின் மைதானமான கெர்கீல்ஸ் அரங்கில் (Kirklees Stadium) இப்போட்டி நடைபெற்றது.

மேலும் வெஸ்ட் பூரும் (West Brom) அணியின் அரங்கமான ஹவ்துரோன்ஸ் (Howthorns Stadium) அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் (West Ham) அணியுடனான போட்டியில் இரு அணிகளும் எவ்வித கோலையும் பெறாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள்

ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம்….

இவ்வாரம் நடைபெற்ற போட்டியில் அதிரடியாக ஆடிய மென்சஸ்டர் சிடி அணி வொட்போட் (Watford) அணிக்கு எதிரான போட்டியில் ஸர்ஜீயோ அக்வேய்ரோ  (Sergio Aguero) மூலம் பெறப்பட்ட ஹட்ரிகினால், (Hatrick) ஆறு கோல்களை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை அடைந்துள்ளது. அதிகளவு ஆதிக்கத்தை போட்டியில் மென்சஸ்டர் சிடி அணி வழங்கியிருந்தாலும், வொட்போட் அணி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மென்சஸ்டர் சிடி அணிக்கு சவால் விடுக்கத் தவறவில்லை. போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் வொட்போட் அணியின் மத்தியகளத்தின் வலது பக்கத்தில் பெறப்பட்ட பிரீ கிக் வாய்ப்பை பெற்ற மென்சஸ்டர் சிடி அணி வீரர் பூரூனேய் (Bruney), பந்தை சிறந்த முறையில் எதிரணியின் பெனால்டி எல்லையினுள் செலுத்தினார். பெனால்டி எல்லையை அடைந்த பந்தை அக்வேரோ தனது தலையால் முட்டி கோலாக்கினார். இதனை தொடர்ந்து போட்டியின் 31 ஆவது நிமிடத்தில் சில்வா, தனக்கு கெப்ரீயல் ஜீஸஸ் (Gabriel Jesus) மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்க மூலையை நோக்கி வழங்கப்பட்ட பந்தை, தரைவழியாக பொனால்டி எல்லையினுள் உட்செலுத்த வொட்போட் அணியின் கோல் காப்பாளர் விட்ட தவறால் தன்னை நோக்கி வந்த பந்தை அக்வேரோ இலகுவாக கோலினுள் செலுத்தி கோலாக்கினார். அதனை தொடர்ந்து சில நிமிடங்களின் பின் போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் ஜீஸஸ் ஓரு கோலை பெற்றுக் கொடுத்து 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலைப்படுத்தினார். இரன்டாம் பாதியை ஆரம்பித்த மென்சஸ்டர் சிடி அணிக்கு போட்டியின் 63 ஆவது நிமிடத்தில் ஒடமென்டி (Otemendi)  மற்றும் மீண்டும் போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் அக்வேரோவும் 89 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் ரஹீம் ஸ்ட்ரேலிங் (Raheem Sterling) ஆகியோரும் கோல்களைப் பெற்று மென்சஸ்டர் சிடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

மேலும், அதே தினம் நடைபெற்ற பர்னமவுத் (Bournemouth) மற்றும் பரய்டன் (Brighton) கழகங்கள் மோதிய போட்டியில் போட்டியின் 67 ஆவது நிமிடத்தில் அன்ட்ருவ் ஸர்மன் (Andrew Surman) மற்றும் போட்டியின் 73 ஆவது நிமிடத்தில் ஜர்மய்ன் டெவோ (Jermain Defoe) ஆகியோரால் பெறப்பட்ட கோலின் மூலம் பர்னமவுத் அணி வெற்றி பெற்றது.

அத்துடன் ஸீவன்சீ சிடி (Swansea City) மற்றும் டொடன்ஹம் (Tottenham) ஆகிய அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் எவ்வித கோலையும் பெறாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

ஸ்டோக் சிடி (Stoke City) மற்றும் நியூகாஸ்ல் ஆகிய கழகங்கள் மோதிய போட்டியில் போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் அட்ஸீ (Atsu) மூலம் பெறப்பட்ட கோலினால் நியூகாஸ்ல் அணி போட்டியில் முன்னிலை வகித்தது. எனினும் போட்டியின் 57 ஆவது நிமிடத்தில் ஸகீரீ  (Shakiri) ஸ்டோக் சிடி சார்பாக ஒரு கோலை பெற்று போட்டியை சமப்படுத்தினார்.

போட்டியை வெற்றி பெறுவதற்காக விரைவாக செயற்பட்ட நியுகாஸ்ல் அணிக்கு, போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் லஸ்கெல்லஸ் (Lascellas) ஓரு கோலை பெற்றுக் கொடுத்து போட்டியில் தனது அணி வெற்றி பெற வழிவகுத்தார்.

ஜொப் மைக்கலின் இரட்டை கோலினால் ரினௌன் அணிக்கு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான இறுதிப் போட்டியில்…

அத்துடன் அதே தினம் நடைபெற்ற மற்றுமொரு போட்டியான கிரிஸ்டல் பலஸ் மற்றும் ஸவுதம்டன் (Southampton) அணிகள் மோதிய போட்டியில் போட்டியின் 6 ஆவது நிமிடத்தில், டேவிஸ் (Devis) மூலம் பெறப்பட்ட கோலினால் ஸவுதம்டன் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியானது கிரிஸ்டல் பலஸ் அணியின் அரங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் மென்சஸ்டர் யுனைடட் மற்றும் எவர்டன் அணிகள் மோதிய போட்டியானது பார்வையாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்த்த போட்டியாய் அமைந்தது. காரணம் யாதெனில் வெய்ன் ருனீ (Wayne Rooney) மென்சஸ்டர் யுனைடட் கழகத்திலிருந்து இப்பருவகாலத்தில் எவர்டன் கழகத்துடன் இணைந்து கொண்டதன் பின்னர், மென்சஸ்டர் யுனைடட் கழகத்திற்கு எதிராக விளையாடிய முதல் போட்டி இதுவாகும். அதேபோல், எவர்டன் கழகத்திலிருந்து இப்பருவகாலம் முதல் மென்சஸ்டர் யுனைடட் கழகத்துடன் இணைந்த ரோமியோ லுகாகு (Romeo Lukaku), எவர்டன் கழகத்திற்கு எதிராக விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் சமமாகவே எதிரணிக்கு சவால் கொடுத்தன. போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மெடிக் (Matic) மூலம் எவர்டன் கழகத்தின் வலது பக்க மத்திய களத்தலிருந்து, இடது பக்க பெனால்டி எல்லையை நோக்கி தூரப்பந்து பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட பந்தை, பந்தானது தரையை அடையும் முன்பே வேகமாக உதைந்து தனது அணிக்கான முதல் கோலை பெற்றுக் கொடுத்தார் அவ்வணியின் தலைவரான வெலன்ஸியா (Velancia).

அதன் பின்னர் போட்டியை சமப்படுத்துவதற்காக மிகவும் கவனமாகவும், வேகமாகவும் ஆடிய எவர்டன் கழகத்திற்கு போட்டியின் 82 ஆவது நிமிடத்தில்,  தனது அணியின் பின்கள வீரர்களால் விடப்பட்ட தவறை சிறப்பாக பயன்படுத்திய எதிரணி வீரரான லுகாகு, தான் மத்தியகளத்தில் பெற்ற பந்தை பெனால்டி எல்லை வரை கொண்டு சென்று தனது அணியின் சக வீரரான மிகிதெரியனிடம் (Mkhitaryan) பந்தை வழங்க, அவர் பந்தை கோலின் வலது பக்க மூலையால் உட்செலுத்தி தனது அணிக்கான இரண்டாவது கோலை பெற்றார்.

மீண்டும் போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பிரீ கிக் வாய்ப்பை பெற்ற லுகாகு, கோலை நோக்கி உதைந்த போது பின்கள வீரர்களால் பந்து  தடுக்கப்பட்டு மென்சஸ்டர் யுனைடட் அணி வீரரான மெடிகிடம் சென்றது. மெடிகினால் வேகமாக உதையப்பட்ட பந்தானது பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் லுகாகுவிடம் செல்ல, லுகாகு கோலுக்கு அருகில் பெற்ற பந்தை இலகுவாக கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 92 ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மார்சியல் (Martial) மென்சஸ்டர் யுனைடட் அணிக்கான 4ஆவது கோலை பெற்றுக் கொடுத்தார். மென்சஸ்டர் யுனைடட் கழகம் இறுதி பத்து நிமிடத்தில் மூன்று கோல்கள் பெற்றது. எனினும், எவர்டன் கழகத்தால் இப்போட்டியில் ஓரு கோலும் பெறப்படவில்லை. இப்போட்டியானது மென்சஸ்டர் யுனைடட் கழகத்தின் அரங்கமான ஓல்ட் ட்ரபட் (Old Traford Stadium) அரங்கில் நடைபெற்றது.

செல்சி கழகத்தின் அரங்கில் நடைபெற்ற, ஆர்சனல் மற்றும் செல்சி கழகங்களுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளாலும் எவ்வித கோலும் பெறப்படாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. போட்டியில் இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தை வழங்கின. அத்துடன் போட்டியில் இரு அணிகளுக்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தாததாலும், இரு அணியினதும் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர்களினதும் அபார ஆட்டத்தாலும் எவ்வித கோலும் பெறப்படவில்லை. அத்துடன் போட்டியின் 87 ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் பின்கள வீரரான டெவிட் லுயிஸ் (David Luiz) இப்பருவகாலத்திற்கான தனது முதல் சிவப்பு அட்டையை பெற்றார்.

பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் அடுத்தகட்டப் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதிறு நடைபெறும்.

நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல் வருமாறு:

நிலை அணி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை எ.பெ.
கோல்கள்
பெ.
கோல்கள்
புள்ளிகள்
1 மெ. சிடி 5 4 0 1 2 16 13
2 மெ. யுனைடட் 5 4 0 1 2 16 13
3 செல்சி 5 3 1 1 5 8 10
4 நியூகாஸ்ல் 5 3 2 0 4 6 9
5 டொடன்ஹம் 5 2 1 2 3 7 8
6 ஹடர்ஸ்வீய்ல்ட் 5 2 1 2 3 5 8
7 பர்ன்லீ 5 2 1 2 5 6 8
8 லீவர்பூல் 5 2 1 2 9 9 8
9 ஸவுதம்டன் 5 2 1 2 4 4 8
10 வெஸ்ட்பூரும் 5 2 1 2 4 4 8
11 வொர்ட்பூட் 5 2 1 2 9 7 8
12 ஆர்சனல் 5 2 2 1 8 7 7
13 ஸ்டோக்சிடி 5 1 2 2 6 5 5
14 ஸீவஸேனாசிடி 5 1 3 2 5 2 5
15 லயஸ்டர்சிடி 5 1 3 1 9 7 4
16 பரய்டன் 5 1 3 1 7 4 4
17 வெஸ்ட்ஹாம் 5 0 3 1 10 4 4
18 எவர்டன் 5 1 3 1 10 2 4
19 பர்னமவுத் 5 1 4 0 9 3 3
20 கிரிஸ்டல்பலஸ் 5 1 5 0 8 0 0