பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு கொரோனா முகாமையாளர் நியமனம்

139
Ministry of Education has appointed

பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு என பிரத்தியேகமாக கொரோனா வைரஸ் தொடர்பில் முகாமையாளர் ஒருவரை நியமித்து வருடாந்த பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகளை (Big Match) நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது 

எனினும், போட்டிகள் நடைபெறுகின்ற மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதும், பார்வையாளர்கள் இன்றி போட்டியை நடத்துவது கட்டாயம் எனவும் கல்வி அமைச்சின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு பணிப்பாளருமான தயா பண்டார, தினமின பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

>> உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்

பாடசாலை மட்டத்திலான விளையாட்டு நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கையில் கிரிக்கெட் விளையாட்டானது இரண்டாவது பிரிவில் இடம்பெற்றிருந்தது

எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றி பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தவும், வைரஸின் தாக்கத்தை விரைவில் இனங்காணவும் ஒவ்வொரு அணியிலும் கொரோனா சம்பந்தமாக பிரத்தியேக முகாமையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

இலங்கையைப் பொறுத்தமட்டில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 600 பாடசாலைகளும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 248 பாடசாலைகளும் கிரிக்கெட் விளையாடி வருகின்றன.  

>> Video – விளையாட்டுத்துறையில் அறிமுகமாகும் Mahela & Co வின் அதிரடி திட்டங்கள் | Sports RoundUp – Epi 147

இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு வருடத்தின் முற்பகுதியிலும், நாட்டிள் ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள முன்னணி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரும் சமர்கள் நடைபெற்று வருகின்றன.  

இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைவடையாத காரணத்தால் இம்முறை பெரும் சமிர்களில் பார்வையாளர்களோ, பாடசாலை மாணவர்களோ அனுமதிக்கபட மாட்டார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

முன்னதாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் எந்தவொரு பாடசாலை மட்ட விளையாட்டு போட்டியையும் நடத்த முடியாது என கல்வி அமைச்சு தடை விதித்திருந்ததுடன், கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்ற சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ள இலங்கை வீரர்கள்!

இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளதால், 19 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனினும், மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19 வயதுக்குபட்ட பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<