அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக?

Sri Lanka Cricket

103

தான் எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

தசுன் ஷானகவின் புகைப்படத்துடன் ஒருசில அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக தசுன் ஷானக சுட்டிக்காட்டியுள்ளார்.

>> UAE அணியுடன் T20I தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான்

இவ்வாறு தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதற்கும், தனக்கும் எந்தவொரு தொடர்புகளும் இல்லையென குறிப்பிட்ட தசுன் ஷானக, அரசியலில் தனக்கு எந்தவித ஈடுபாடும் இல்லை என்பதை குறிப்பிட்டார்.

அவருடைய புகைப்படங்களை வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதை அறிந்த இவர், தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தசுன் ஷானகவின் குறித்த டுவிட்டர் பதிவில், “அரசியல் கட்சியொன்றின் பிரச்சாரத்தில் என்னுடைய புகைப்படம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை நான் பார்வையிட்டேன். எந்த கட்சியுடனும் எனக்கு விருப்பமில்லை. அதேநேரம் கட்சியொன்றின் தூதுவராக செயற்படுவதாகவும் இல்லை. நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதில் மாத்திரமே என்னுடைய உண்மையான அன்பைக் கொண்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தசுன் ஷானக தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இண்டர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரில் டுபாய் கெபிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<