மாலிங்க மும்பை அணியுடன் இணைவார்: மஹேல நம்பிக்கை

535
Mumbai Indians facebook

உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காலி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட லசித் மாலிங்க, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து கொள்ளவார் என தான் நம்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தமது முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை நேற்று (24) எதிர்கொண்டது. இப்போட்டியில், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னாள் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது.

ரிஷாப் பாண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று (24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரிஷாப் பாண்ட்டின்…

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இம்முறை .பி.எல் தொடரில் லசித் மாலிங்கவின் பங்குபற்றல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மஹேல ஜயவர்தன பதிலளிக்கையில்,  

“எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மாலிங்கவுக்கு 4 அல்லது 5 போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டிவரும். அதிலும் குறிப்பாக இம்முறை .பி.எல் ஏலத்தில் வைத்துதான் நாங்கள் மாலிங்கவை மீண்டும் ஒப்பந்தம் செய்தோம். அதற்குமுன் மாலிங்கவை இம்முறை .பி.எல் தொடர் முழுவதும் விளையாடுவதற்கு அனுமதிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எமக்கு உறுதியளித்திருந்தது. எனவே, .பி.எல் ஏலம் இம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் எந்தவொரு உள்ளூர் போட்டிகளும் இடம்பெறமாட்டாது எனவும், அதன்காரணமாக இலங்கை வீரர்களை .பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதிக்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.  

தற்போது, உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாத்தை தெரிவு செய்வதற்காக மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, மாலிங்கவின் பங்குபற்றல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம். அதன்பிறகு அவர் இம்முறை .பி.எல் போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிப்போம்” என தெரிவித்தார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை…

இம்முறை .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான லசித் மாலிங்க, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மும்பை அணியில் முதல் ஆறு போட்டிகளில் விளையாட முடியாது என அறிவித்திருந்தார்.

இது குறித்து மாலிங்கவினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனுப்பியிருந்த அறிவிப்பில், ‘நான் .பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதி சான்றிதழை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டேன், அதில் தாராளமாக விளையாட முடியம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது உலகக் கிண்ணத்துக்குச் செல்ல விரும்பும் அனைத்து வீரர்களும் மாகாண ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனவே, நாட்டுக்காக விளையாடும் நோக்கில் .பி.எல் போட்டிகளில் விளையாடுவதை புறம்தள்ளிவிட்டு மாகாண ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற சம்மதம் தெரிவித்தேன்.

இதனையடுத்து, எனக்குப் பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்வது சிறந்தது என நான் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் அறிவித்தேன்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, நேற்று (24) ஜொஹனெஸ்பேர்கில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான 3ஆவதும், இறுதியுமான டி-20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என பறிகொடுத்தது,

எனவே, கடந்த நான்கு மாதங்களாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்த இலங்கை அணி ;ன்னும் இரண்டு தினங்களில் நாடு திரும்பவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்த மாலிங்க

இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்…

இதுஇவ்வாறிருக்க, இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவரான லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியுடன் .பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக நேரடியாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

மாலிங்கவின் விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளது. இதன்போது, ஏற்கனவே மாலிங்கவுக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் அவரை .பி.எல் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டுள்ளது.   

இதன்படி, .பி.எல் தொடரில் திறமையை வெளிப்படுத்தினால் மாத்திரமே உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்ற நிபந்தனையுடன் லசித் மாலிங்கவுக்கு மாகாண ஒருநாள் தொடரிலிருந்து விடுகை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுதொடர்பிலான எந்தவொரு அறிவிப்பையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<