மாலிங்கவுடன் மும்பை அணியில் இணைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்

493
Mumbai Indians Twitter

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர் எடம் மில்ன்னிற்கு பதிலாக, மேற்கிந்திய தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஷாரி ஜோசப்பை ஒப்பந்தம் செய்துள்ளது.

பட்லரின் ஆட்டமிழப்பை வைத்து விழிப்புணர்வை ஆரம்பித்த பொலிஸார்

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் (25)……..

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் எடம் மில்ன்னை மும்பை அணி ஒப்பந்தம் செய்திருந்த போதும், அவர் ஐ.பி.எல். தொடருக்கு முன்னர் உபாதைக்கு முகங்கொடுத்தமையால் தொடரிலிருந்து முழுமையான விலகியுள்ளார். இந்த நிலையில் 22 வயதான இளம் பந்து வீச்சாளர் அல்ஷாரி ஜோசப் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணியில் 2016ம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடிய அல்ஷாரி ஜோசப், அந்த அணி 19 வயதுக்குட்டப்டோருக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக மாறியிருந்தார். இதன் பின்னர், 2016ம் ஆண்டு தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்ட இவர், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2016ம் அறிமுகமாகியிருந்தார்.

இதுவரையில், 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். எவ்வாறாயினும், அல்ஷாரி ஜோசப் T20I போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை.  

மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு……..

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியை பெற்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் தலைவர் லசித் மாலிங்கவும் நேற்றைய தினம் (27) மும்பை இந்தியன்ஸ் அணியுடன், பெங்களூரில் வைத்து இணைந்து கொண்டுள்ளார். இலங்கையில் சுப்பர் ப்ரொவின்சியல் (Super Provincial) ஒருநாள் தொடர் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவிருந்தாலும், மாலிங்க ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதித்துள்ளது.

மும்பை அணியுடன் இணைந்துள்ள லசித் மாலிங்க மற்றும் அல்ஷாரி ஜோசப் ஆகியோர் இன்று (28) நடைபெறவுள்ள பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இருவரும் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தங்களுடைய வேகப்பந்து துறையை முழுமைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடம் மில்ன்னின் உபாதை மற்றும் லசித் மாலிங்கவின் உள்ளூர் போட்டிகள் மற்றும் பும்ராவின் உபாதை என சிக்கலுக்கு முகங்கொடுத்திருந்தது. எனினும், பும்ரா உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், லசித் மாலிங்க மற்றும் அல்ஷாரி ஜோசப் ஆகியோரின் வருகை குழாத்துக்கு மேலும் பலத்தை வழங்கியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<