புனித தோமியர், நாலந்த, குருகுல கல்லூரிகளுக்கு வெற்றி

90

இன்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான போட்டிகளில், புனித தோமியர் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் புனித தோமியர் கல்லூரி வெற்றியீட்டியது.

மேலும் குருநாகல் மலியதேவ கல்லூரி மற்றும் கொழும்பு நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் நாலந்த கல்லூரியும், வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் களனி குருகுல கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் குருகுல கல்லூரியும் வெற்றிபெற்றன.

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரி பெற்றுக்கொண்ட 282 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி இன்றைய நாள் முழுவதும் துடுப்பாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.

ஜோசப் கல்லூரி சார்பாக நிபுன் சுமணசிங்க 114 ஓட்டங்களை பதிவு செய்த அதேநேரம் ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே மற்றும் பஹன் பெரேரா அரை சதங்களை பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்:

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 282 (91.4) – திணித்த பஸ்நாயக்க 64, ஷெஹான் பெர்னாண்டோ 51, டிலான் சதுரங்க 42, சலன சங்கல்ப 30, மகேஷ் தீக்ஷன 21, நிபுன் சுமணசிங்க 4/32, ருச்சிர ஏக்கநாயக்க 2/35

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 364/8 (88) – நிபுன் சுமணசிங்க 114, ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே 72, பஹன் பெரேரா 59, தினித் மதுரவல 49, ரெஷான் கவிஷ்க 3/84

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.


புனித அலோசிஸ் கல்லூரி, காலி  எதிர் மஹிந்த கல்லூரி காலி

மஹிந்த கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமான இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அலோசியஸ் கல்லூரி 59.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய ரவிந்து சஞ்சன, ஹரீன் புத்தில, மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச் சதங்களின் உதவியுடன் குறித்த ஓட்ட இலக்கை அடைந்தது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய மஹிந்த கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்:

புனித அலோசிஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 247 (59.5) – ரவிந்து சஞ்சன 89, ஹரீன் புத்தில 77, அஷேன் பண்டார 52, பிரமித் ஹன்சிக 3/30

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 38/0 (21)


 திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

இவ்விரு அணிகளுக்கிடையில் இரண்டாம் நாளாக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்சில் வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டதினை இரண்டாவது இன்னிங்சில் வெளிப்படுத்த தவறியதால் புனித தோமியர் கல்லூரி ஒரு விக்கெட்டினால் வெற்றியீட்டியது.

திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 224 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. அந்த வகையில் 45 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய திரித்துவக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களைக் குவித்தது.

அதனை தொடர்ந்து வெற்றியீட்டுவதற்கு 121 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி 40.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்:

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 224 (64.5) – விமங்க சூரியபோல 36, ஷானோகீத் சண்முகநாதன் 35, பூர்ண வனசேகற 23, ஹசிந்த ஜயசூரிய 26, பவித் ரத்நாயக்க 5/54, டெல்லோன் பீரிஸ் 2/40

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 179/9d (52) – சிதார ஹப்புஹின்ன 76, டெல்லோன் பீரிஸ் 31*, விமுக்தி நெதுமல் 5/53

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 76 (22.5) – திசரு தில்ஷான் 37, தெவின் ஈறியகம 4/18, டெல்லோன் பீரிஸ் 3/25, பவித்  ரத்னாயக்க 3/29

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாம் இன்னிங்ஸ்): 124/9 (40.5) – ருமேஸ் நல்லபெருன 35 *, விமுக்தி  நேத்மல் 3/45

போட்டி முடிவு: புனித தோமியர் கல்லூரி 1 விக்கெட்டினால் வெற்றி


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் லக்ஷித ரசன்ஜனவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் கொழும்பு நாலந்த கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய நாலந்த கல்லூரி 206 ஓட்டங்களை பெற்று 80 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

அதனையடுத்து, இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மலியதேவ கல்லூரி 179 ஓட்டங்களை பெற்று 99 ஓட்டங்களை வெற்றி இலக்காக நாலந்த கல்லூரிக்கு நிர்ணயித்தது. இலகுவான ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய நாலந்த கல்லூரி மலிங்க அமரசிங்க பெற்றுக்கொண்ட 31 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்:

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 126 (40.3) – தில்ஷான் கொல்லுரே 65, தமித சில்வா 23, லக்ஷித்த ரசன்ஜன 4/13, கழன பெரேரா 3/35, அசெல் குலதுங்க 3/17

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 206 (49) – தசுன் செனவிரத்ன 66, ருசிறு டி சில்வா 27, கழன கத்திரியாராச்சி 27, கசுன் சந்தருவன் 23, தமித சில்வா 5/46, சஞ்ஜீவன் பிரியதர்ஷன 3/57, கவின் பண்டார 2/35

மலியதேவ கல்லூரி, குருநாகல் (இரண்டாம் இன்னிங்ஸ்): 179 (49.3) தில்ஷான் கொல்லுரே 50, முதித்த பிரேமதாச 33, லக்ஷித்த ரசன்ஜன 3/41, கவீஷ மதுரப்பெரும 3/32

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்):103/4 (22.5) – மலிங்க அமரசிங்க 31, தமித் சில்வா 2/61

போட்டி முடிவு: 6 விக்கெட்டுகளால் நாலந்த கல்லூரிக்கு வெற்றி


புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் குருகுல கல்லூரி, களனி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் புருத்துவி ருஷார மற்றும் உதார ரவிந்து ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் குருகுல கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய குருகுல கல்லூரி 143 ஓட்டங்களை பெற்ற அதேவேளை 40 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. அந்த வகையில் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுபாடிய புனித அந்தோனியார் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

113 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய குருகுல கல்லூரி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்:

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 103 (39.1) –  ரஷ்மிக்க மெவான் 35, அரிந்த பசிந்து 30, லசிந்து அரோஷ 3/25, சச்சித சமித் 3/10, உதார ரவிந்து 3/10

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 143/7d (23.2) – புருத்துவி ருஷார 63, அவிஷ்க தரிந்து 2/30, துஷார மதுஷான் 2/29, கவிந்து மதுக 2/32

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (இரண்டாம் இன்னிங்ஸ்): 153 (48.4) – அவிஷ்க தரிந்து 33, கவிந்து மதுக 32, ரஷ்மிக்க மெவான் 28, சச்சீந்திர சமித் 3/26, நவீந்தற சரித் 3/36

குருகுல கல்லூரி, களனி (இரண்டாம் இன்னிங்ஸ்): 114/4 (26.4) – உதார ரவிந்து 47, கெமிர நயந்தரு 30*, துஷார மதுஷான் 3/58

போட்டி முடிவு: குருகுல கல்லூரி 6 விக்கெட்டுகளால் வெற்றி