பட்லரின் ஆட்டமிழப்பை வைத்து விழிப்புணர்வை ஆரம்பித்த பொலிஸார்

204

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கொண்ட ஜோஸ் பட்லரின் ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பு (Mankad) பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன.

மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு நாளும் சுவாரஷ்ய விடயங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன…

குறித்த ஆட்டமிழப்பு விவகாரம் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விடயத்தில் எம்.சி.சி (MCC) தலையிட்டிருந்தது. இந்த ஆட்டமிழப்பு குறித்த அறிவித்தலை வெளியிட்டிருந்த எம்.சி.சி, அஸ்வின் மேற்கொண்ட ஆட்டமிழப்புக்கு கிரிக்கெட்டில் இடம் இருக்கின்றது என்பதை வெளிவுப்படுத்தியிருந்தது.

அஸ்வினால் மேற்கொள்ளப்பட்ட மேன்கட் முறையிலான இந்த ஆட்டமிழப்பு உலக அளவில் கிரிக்கெட் ட்ரெண்டாக மாறியுள்ளதுடன், சமுக வலைத்தளங்களிலும் அதிகமாக பரவிவருகின்றது. இவ்வாறு, உலக அளவில் ட்ரெண்டாக மாறியுள்ள இந்த ஆட்டமிழப்பினை வைத்து, இந்தியாவின் – கொல்கத்தா மாநில பொலிஸார் வாகன சாரதிகளுக்கு டுவிட்டர் மூலமாக புதிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்கும் போது ராஜஸ்தான் அணி வெற்றியிலக்கை இலகுவாக அடையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எனினும், அஸ்வின் தந்திரோபாயமான முறையில் அவரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. முக்கியமாக ஜோஸ் பட்லர் அவருக்கான எல்லையை முறையற்ற விதத்தில் கடந்த காரணத்தினால் தான் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற நேரிட்டது.

Kolkata Police on Twitter

https://t.co/mlcI1qsXeV

அப்படி இருக்கையில், கொல்கத்தாவின் போக்குவரத்து பொலிஸார், தங்களுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அஸ்வின், பட்லரை ஆட்டமிழக்கச் செய்யும் புகைப்படத்தையும், அதற்கு அருகில் சமிக்ஞை விளக்குக்கு அருகில் வரையப்பட்டிருக்கும் கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.

குறித்த இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு, “துடுப்பாட்ட வீரருக்கான எல்லையோ (crease)? அல்லது வீதியோ? இரண்டிலும் கோட்டினை தாண்டினால் அதற்கான விளைவை அனுபிவித்தே ஆகவேண்டும்” என பதிவினை இட்டுள்ளனர். இவ்வாறு, கொல்கத்தா பொலிஸார் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு சமுக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

ஜோஸ் பட்லருக்கு சச்சித்ரவை ஞாபகப்படுத்திய அஷ்வின்

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இம்முறை ஆரம்பத்திலிருந்து சூடுபிடிக்க…

இதற்கு முன்னர், கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில், ஜஸ்பிரிட் பும்ரா வீசிய நோ போல் பந்தால், இரண்டாவது வாய்ப்பை பெற்ற பக்ஹர் ஷமான், சதம் அடித்ததுடன், பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வென்றது.

Jasprit bumrah on Twitter

@traffic_jpr well done Jaipur traffic police this shows how much respect you get after giving…

பின்னர், குறித்த நோ போல் பந்து வீசப்பட்ட புகைப்படத்தையும், பாதசாரி கடவையில் வாகனங்கள் நிறுத்தப்பட்ட புகைப்படமொன்றையும் இணைத்து ஜெய்பூர் பொலிஸார், பாதையில் விளம்பர பலகையொன்றை வைத்தனர். குறித்த விளம்பர பலகையில் “எல்லையை கடக்க வேண்டாம். அது பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்ற வாசகத்தினையும் பொலிஸார் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க