இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் தமிழ் யூனியன், இராணுவ கழகங்கள்

96

இலங்கை கிரிக்கெட் சபையின் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் நான்கு போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (09) நிறைவடைந்தன.

SSC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு சவாலான 366 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SSC கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சச்சித்ர சேனநாயக்க

இதன்படி வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் சிலாபம் மேரியன்ஸ் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சச்சித்ர சேனநாயக்க அந்த 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 374 (101) – சச்சித்ர சேனநாயக்க 89, சம்மு அஷான் 79, ஆகாஷ் சேனாரத்ன 56, நிபுன் தனஞ்சய 46, சாகர் பரேஷ் 4/138, புலின தரங்க 3/58

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 274 (73.3) – திக்ஷில டி சில்வா 72, புலின தரங்க 51, நிமேஷ் விமுக்தி 40, சச்சித்ர சேனநாயக்க 6/73

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 265/9d (69) – கவிந்து குலசேகர 71, தசுன் ஷானக்க 68, நிபுன் தனஞ்சய 61, சாகர் பரேஷ் 5/107, புலின தரங்க 3/42

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 57/2 (16) – யசோத லங்கா 26, சச்சித்ர சேனநாயக்க 2/19


NCC எதிர் CCC

கொழும்பு, கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் CCC அணிக்கு எதிராக வலுவான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்கில் NCC அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வருகிறது.

NCC அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 227 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்போது சதுரங்க டி சில்வா சதம் பெற்றார். இந்தப் போட்டியில் பெறப்படும் ஐந்தாவது சதம் இதுவாகும். சதுரங்க முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 411 (104.3) – மஹேல உடவத்த 162, பெதும் நிஸ்ஸங்க 119, லஹிரு உதார 35, வனிந்து ஹசரங்க 4/63, அஷான் பிரியன்ஜன் 2/52, லஹிரு மதுஷங்க 2/52

CCC (முதல் இன்னிங்ஸ்) – 427 (98.3) – ரொன் சந்திரகுப்தா 118, மினோத் பாணுக 104, அஷான் பிரியன்ஜன் 51, வனிந்து ஹசரங்க 40, சதுரங்க டி சில்வா 4/103, அசித்த போயகொட 2/65

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 243/4 (48.3) – சதுரங்க டி சில்வா 114*, பதும் நிஸ்ஸங்க 70, லஹிரு உதார 50, வனிந்து ஹசரங்க 3/61

இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஓன் (follow on) செய்திருக்கும் இராணுவ விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராடி வருகிறது.

கட்டுநாயக்கவில் நடைபெற்று வரும் போட்டியில் கோல்ட்ஸ் அணியின் மூன்று வீரர்கள் அடுத்தடுத்து சதம் பெற்ற நிலையில் அவ்வணி முதல் இன்னிங்சுக்காக 574 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இராணுவ அணி 168 ஓட்டங்களுக்கு சுருண்டதோடு தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை பலோ ஒன் செய்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 210 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்படி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க அந்த அணி மேலும் 196 ஓட்டங்களை எடுக்க வேண்டி உள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d (148.1) – தனஞ்சய லக்‌ஷான் 141, பிரியமால் பெரேரா 127, விஷாட் ரந்திக 106, அவிஷ்க பெர்னாண்டோ 75, நிசல தாரக்க 55, அசேல குணரத்ன 2/40, நுவன் லியனபதிரன 2/67, புத்திக மதுஷங்க 2/91, தனுஷிக பண்டார 2/124

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (48.5) – ஹிமாஷ லியனகே 46, தனுஷிக பண்டார 26, நலின் பிரியதர்ஷன 4/32, நிசல தாரக்க 3/43, ஜெஹான் டானியல் 2/33

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) F/O – 210/3 (48) – அசேல குணரத்ன 86*, ஹிமாஷ லியனகே 48*, துஷான் விமுக்தி 40


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்  

பிரமோத் மதுவன்தவின் இரட்டைச் சதத்தின் உதவியோடு தமிழ் யூனியன் அணிக்கு எதிராக சரசென்ஸ் முதல் இன்னிங்சுக்காக இமாலய ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ் யூனியன் அணி 244 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சரசென்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 574 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பங்களாதேஷுடனான ஒருநாள் குழாமில் மார்டின் கப்டிலுக்கு அழைப்பு

இதன் போது 21 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரர் மதுவன்த 483 பந்துகளுக்கு முகம் கொடுத்து 212 ஓட்டங்களை பெற்றார். நிபுன் கருனநாயக்கவும் 149 ஓட்டங்களை குவித்தார். இம்முறை முதல்தர போட்டிகளில் இதுவரை மொத்தம் 15 இரட்டைச் சதங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்)330 (101.4) – மனோஜ் சரத்சந்திர 68, சிதார கிம்ஹான் 52, தரங்க பரனவிதாரண 50, கமிந்து மெண்டிஸ் 41, ரமித் ரம்புக்வெல்ல 40, சாலிய சமன் 3/40, கமிந்து கனிஷ்க 3/74

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d (166.4) – பிரமோத் மதுவன்த 212, நிபுன் கருனநாயக்க 149, அஷேன் பண்டார 94, அண்டி சொலமன் 77, ரமித் ரம்புக்வெல்ல 4/96, ரங்கன ஹேரத் 2/73

அனைத்து போட்டிகளினதும் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க