புதிய தலைவருடன் IPL தொடரில் களமிறங்கும் சென்னை சுப்பர் கிங்ஸ்

82
MS Dhoni hands over CSK captaincy to Ruturaj Gaikwad

நாளை (22) ஆரம்பமாகவிருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் முதல் போட்டியில் ஆடவிருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>>ஹஸரங்கவின் டெஸ்ட் மீள் வருகை திட்டமா? விளக்கமளிக்கும் SLC<<

அந்தவகையில் புதிய IPL பருவத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்திராஜ் கய்க்வாட் செயற்படவிருக்கின்றார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர தலைவராக செயற்பட்டிருந்த மஹேந்திர சிங் டோனி தனது தலைவர் பதவியினை, ருத்திராஜ் கய்க்வாடிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஆடி வரும் கய்க்வாட் இதுவரை 52 போட்டிகளில் சென்னை அணியினை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிய தலைவரினைப் பெற்றிருக்கும் IPL தொடரின் நடப்புச் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தமது முதல் போட்டியில் நாளை (22) தமது சொந்த மைதானத்தில் வைத்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

இதேவேளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் ஒருவர் அதிரடியான முறையில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் விடயமானது அவ்வணி இரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் செயற்பாடாகவும் மாறியிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<