ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்று; பலர் தனிமைப்படுத்தலில்

129
PA Photos

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Video – துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதற்கான இரகசியத்தைக் கூறும் Charith Asalanka..!

கடந்த சனிக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே ரவி சாஸ்திரி கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் ரவி சாஸ்திரியும் அவருடன் இணைந்த இந்திய அணியின் ஏனைய பயிற்றுவிப்பாளர்களான பாரத் அரூண் (பந்துவீச்சு பயிற்சியாளர்), R. சிறிதர் (களத்தடுப்பு பயிற்சியாளர்) மற்றும் நிதின் படேல் (உடற்பயிற்சியாளர்) ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், வைத்திய அதிகாரிகளின் மேலதிக அறிவுறுத்தல்கள் வரும் வரையில் ரவி சாஸ்திரி அடங்கலான இந்திய அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் அடங்கும் அனைவரும் தனிமைப்படுத்தலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Video – இலங்கை வீரர்களுக்காக Dasun Shanaka முன்வைத்த கோரிக்கை..!

அதேநேரம், தலைமை பயிற்றுவிப்பாளர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<