இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

121
PCB

இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்றும், அந்த அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய டெஸ்ட போட்டிகளை வென்று பாகிஸ்தான் அணி தொடரை வெல்லும் எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

மன்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

>>பட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை

மூன்று போட்டிகள் கொண்ட இந்த போட்டி தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை சவுதம்டனில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்,

இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று இருக்க வேண்டும்.

போட்டியில் நல்ல நிலையில் இருந்து பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அணியால் இன்னும் தொடரை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

கடினமான தருணத்தில் அணியினரின் உத்வேகத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது. 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் சொதப்பியதால் பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

>>Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

இதுபோன்ற தோல்வியினால் அணி வீரர்களின் உத்வேகம் குறையத்தான் செய்யும். ஆனால் அணி நிர்வாகத்தினர், வீரர்கள் எதிர்மறையான விடயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையை எடுத்து கூறி நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

இங்கிலாந்தைவிட முதலாவது இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, அசார் அலியின் தலைமைத்துவம் பற்றி இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவிக்கையில்,

”277 ஓட்டங்களைத் தக்கவைக்க பாகிஸ்தான் சரியான வியூகங்களைப் பிரயோகிக்கத் தவறவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்ற நிலையிலிருந்த இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து மீண்டு வந்து 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

>>தண்ணீர் எடுத்துச் சென்ற சர்பராஸ் அஹமட்: முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

இதற்கான முழு பாராட்டையும் கிறிஸ் வோக்ஸையும், ஜோஸ் பட்லரையும் சாரும். பாகிஸ்தான் அணி கடுமையாகப் போராடியது. ஆனாலும், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்பத்தப்படுத்தியருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<