2020இல் விளையாட்டு ரசிகர்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத தருணங்கள்!

355

விளையாட்டுத் துறையை பொருத்தவரை யாரும் எதிர்பார்க்க முடியாத வருடமாக 2020ஆம் ஆண்டு அமைந்திருந்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தாலும், கொவிட்-19 வைரஸ் பல்வேறு மிகப்பெரிய போட்டித் தொடர்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

ஆனாலும், இதற்கிடையிலும் சில போட்டிகளை விளையாட்டு ஆர்வாளர்களின் அலப்பரிய முயற்சிகளால் நடத்தமுடிந்ததுடன், இதன் பயனாக ரசிகர்களால், விளையாட்டில் மறக்க முடியாத தருணங்களை பெறமுடிந்திருந்தது.  

>> தேசிய மெய்வல்லுனரில் பிரகாசித்த வீரர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்

கோபி பிரையன்ட்டின் மரணம் 

லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் விளையாடிய அமெரிக்காவின் முன்னணி கூடைப்பந்தாட்ட வீரரான கோபி பிரையன்ட், கலிபோர்னியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அவருடைய 13 வயது மகளுடன் உயிரிழந்தார்.

kobe bryant
kobe Bryant (Courtesy – vox.com)

ThePapare ஷம்பியன்ஷிப் கிண்ணம் ஸாஹிரா கல்லூரி வசம் 

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியை வெற்றி கொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

வன்டேஜ் FA கிண்ணம் பொலிஸ் அணிக்கு 

இலங்கையின் பலைமைவாய்ந்த கால்பந்து தொடராகக் கருதப்படும் FA கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் வெற்றி கொண்ட இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

சாதனை ரசிகர்களை குவித்த மகளிர் T20I உலகக்கிண்ண இறுதிப்போட்டி

அவுஸ்திரேலிய மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மகளிர் T20I உலகக் கிண்ண இறுதிப்போட்டியில், 86,174 ரசிகர்கள் குவிந்திருந்ததுடன், மகளிர் கிரிக்கெட்டுக்காக வருகைத்தந்த அதிகூடிய ரசிகர்கள் எண்ணிக்கையாக இது பதிவாகியது. இந்த இறுதிப்போட்டி நிறைவுபெற்ற சில தினங்களில், 2020ம் ஆண்டின் மறக்கமுடியாத கொவிட் -19 வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால், சர்வதேசம் முடங்கியதுடன், விளையாட்டு நிகழ்வுகளும் முடங்கின.

ICC Women’s T20I (Courtesy – abc.net)

தொடர்ச்சியாக 5வது முறையும் சம்பியனாகிய கண்டி SC

இலங்கை உள்ளூர் றக்பி வரலாற்றில் தொடர் வெற்றிகளை குவித்து வரும், கண்டி SC  அணி தொடர்ச்சியாக 5வது முறையாக டயலொக் றக்பி லீக்கில் தங்களுடைய சம்பியன் பட்டத்தை வென்றது.

இம்முறை நடைபெற்ற லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக கண்டி அணி வலம்வந்த நிலையில், கொவிட்-19 வைரஸ் காரணமாக சுப்பர் ரவுண்ட் நடைபெறவில்லை. இதனால், தோல்வியுறாத அணியாக வலம்வந்த கண்டி அணிக்கு சம்பியன் கிண்ணம் வழங்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 வைரஸிற்கு மத்தியில் மைதானத்துக்கு ரசிகர்களை அழைத்த நியூசிலாந்து 

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில், சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் இன்றிய மைதானத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நியூசிலாந்து றக்பி வெற்றிகரமாக ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்திருந்தது. 5 அணிகள் பங்கேற்ற சுப்பர் றக்பி ஆட்டெரோவா தொடரை  நியூசிலாந்த றக்பி நடத்தியிருந்தது.

Super Rugby Aotearoa (www.superrugby.co.nz)

30 வருடங்களுக்கு பின்னர் ப்ரீமியர் லீக் சம்பியனாகிய லிவர்பூல் FC

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரில் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர், லிவர்பூல் அணி சம்பியனாக முடிசூடியது. மென்செஸ்டர் யுனைடட் மற்றும் செல்ஸி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதி லீக் போட்டியில், மென்செஸ்டர் யுனைடட் அணியையும் வீழ்த்தி லிவர்பூல் FC அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

liverpool
Liverpool (Courtesy – Liverpool.com)

FFSL தலைவர் கிண்ணம் 2020

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக அனைத்துவகையான விளையாட்டு நிகழ்வுகளும் பிற்போடப்பட்டிருந்தன. இந்தநிலையில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முயற்சியினால், வான்டேஜ் FFSL தலைவர் கிண்ணம் நடைபெற்றதுடன், சம்பியன் பட்டத்தை கொழும்பு FC அணி வெற்றிக்கொண்டது.

லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸிற்கு 17வது கிண்ணம் 

கோபி பிரையன்ட் ஹெலிகொப்டர் விபத்தில்  உயிரிழந்த பின்னர், அவரின் அணியான லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி, மியாமி ஹீட் அணியை வீழ்த்தி, NBA சீரிஸின் 17வது சம்பியன் கிண்ணத்தை வென்றது.

Lakers (loopnewslive)

லிவிஸ் ஹெமில்டனின் 7வது போமுயூலா 1 சம்பியன்ஷிப்

உலகின் முன்னணி போமுயூலா 1 கார் ஓட்டப்பந்தய வீரரான லிவிஸ் ஹெமில்டன் தன்னுடைய 7வது போமுயூலா 1 சம்பியன் பட்டத்தை, துருக்கி க்ராண்ட் ப்ரிக்ஸில் வைத்து வெற்றிக்கொண்டார். உலகின் அதிகூடிய போமுயூலா 1 சம்பியன்ஷிப்பை வென்ற வீரரான, மைக்கல் ஷூமேக்கரின் சாதனையை இதன்மூலம் இவர் சமப்படுத்தினார்.

>> இலங்கை வரும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை

Lewis Hamilton (Courtesy – abc.net)

மகேந்திரசிங் டோனியின் ஓய்வு 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வீரருமான மகேந்திரசிங் டோனி 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார். இந்திய அணிக்கு உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் T20I உலகக் கிண்ணம் போன்ற மூன்று கிண்ணங்களை வென்றுக்கொடுத்த ஒரேயொரு இந்திய தலைவராக இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது IPL கிண்ணத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ்

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சம்பியன் கிண்ணத்தை, ஐந்தாவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கொண்டது. இறுதிப் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தி, 5 தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுக்கொண்டது.

>> பல வீரர்கள் நீக்கம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

Mumbai Indians (Courtesy – IPLT20.COM)

கன்னி LPL  கிண்ணத்தை வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ்

இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்விக்கு மத்தியில் இருந்த, லங்கா ப்ரீமியர் லீக் தொடர், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், சம்பியனாக திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மகுடம் சூடியது.

LPL final (Courtesy – SLC)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<