இளம் இந்திய பந்துவீச்சாளர் பாணியில் சந்தேகம்

325

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சேட்டன் சக்கரியா சந்தேகத்திற்கு இடமான பந்துவீச்சுப் பாணியுடன் காணப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) குறிப்பிட்டுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹார்திக் பாண்டியா

அதன்படி இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் புதிய பருவத்திற்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சேட்டன் சக்கரியா சந்தேகத்திற்கு இடமான பாணியில் பந்துவீசுவதாக IPL அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றது 

அத்துடன் சக்காரியாவுடன் சேர்த்து மொத்தமாக IPL வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்யப்பட்டவர்களில் 7 பேர் சந்தேகத்திற்கு இடமான பந்துவீச்சுப் பாணியுடன் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது 

எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சக்காரியாவிற்கு பந்துவீச தடைகள் எதுவும் வழங்கப்படவில்லை. 

இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 2 T20I சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் சக்கரியா 19 IPL போட்டிகளிலும் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இதேநேரம் IPL போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 19ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளதோடு, இந்த வீரர்கள் ஏலத்தில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டுவீரர்கள் என மொத்தம் 333 பேர் பங்கெடுக்கவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<