பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற ஸ்டார்க்கின் மனைவி, சகோதரர்!

Commonwealth Games 2022

247

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மிச்சல் ஸ்டார்க்கின் மனைவி அலீஷா ஹீலி மற்றும் அவருடைய சகோதரர் பிரெண்டன் ஸ்டார்க் ஆகியோர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்றுள்ளனர்.

மிச்சல் ஸ்டார்க்கின் மனைவி அலீஷா ஹீலி, பொதுநலவாய விளையாட்டு விழாவின்  கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். இதில் அவுஸ்திரேலிய அணியானது, இந்திய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்கவைத்துக்கொண்டது.

நீளம் பாய்தல், ஈட்டி எறிதலில் பிரகாசிக்க தவறிய இலங்கை வீரர்கள்!

இதன்மூலம் அலீஷா ஹீலி பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை தமதாக்கிக்கொண்டிருந்த நிலையில், மிச்சல் ஸ்டார்க்கின் சகோதரர் பிரெண்டன் ஸ்டார்க் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.

பொதுநலவாய  விளையாட்டு விழாவின் உயரம் பாய்தல் நிகழ்வில் நடப்பு சம்பியனான பிரெண்டன் ஸ்டார்க் 2018ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 02.31 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.

இவ்வாறான நிலையில், இம்முறை நடைபெற்ற உயரம் பாய்தல் போட்டியில் 02.25 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார். உயரம் பாய்தல் நிகழ்வின் தங்கப்பதக்கத்தை நியூசிலாந்து வீரர் ஹமிஷ் கெர் வெற்றிக்கொண்டிருந்தார்.

இதேவேளை மிச்சல் ஸ்டார்க் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக விளையாடிவருவதுடன், கடந்த ஆண்டு நடைபெற்ற T20I உலக்ககிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <