லங்கா பிரீமியர் லீக் 2024 தொடரின் இறுதி வீரர்கள் குழாம்கள் அறிவிப்பு

77

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 2024ஆம் ஆண்டு தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் வீரர்கள் குழாம்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  

LPL T20 தொடரின் ஐந்தாவது பருவத்திற்கான போட்டிகள் ஜூலை 01ஆம் திகதி ஆரம்பமாகுகின்றன. தொடரின் முதல் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகள் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் வைத்து மோதவிருக்கின்றன 

முன்னணி வீரர்கள் நீக்கம் ; இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

இந்த நிலையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அணிக்குழாம்களில் ஏற்கனவே உரிமையாளர் சிக்கல் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, புதிய வீரர்களை தமது குழாத்தில் இணைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

அதில் LPL T20 வீரர்கள் ஏலத்தில் எந்த அணிகள் மூலமும் கொள்வனவு செய்யப்படாது போயிருந்த அதிரடி துடுப்பாட்டவீரரான குசல் ஜனித் பெரேராவினை தம்புள்ளை சிக்ஸர்ஸ் தமது வீரர்கள் குழாத்தினுள் உள்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் 

மறுமுனையில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியானது வெளிநாட்டு வீரர்களாக தென்னாபிரிக்க துடுப்பாட்ட நட்சத்திரம் ரீசா ஹென்ரிக்ஸ், நியூசிலாந்தின் மார்க் சாப்மன், தவ்ஹீத் ரிதோய் மற்றும் மொஹமட் நபி ஆகிய வீரர்களை அடக்கியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் 

அதேநேரம் ஏலத்தில் தம்புள்ளை அணியினால் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இப்திக்கார் அஹ்மட், கைதர் அலி ஆகிய வீரர்கள் இம்முறை LPL T20 தொடரில் ஆட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

LPL அணிக்குழாம்கள்

 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<