குசல் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று

South Africa tour of Sri Lanka 2021

648

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, உபாதைக்கு முகங்கொடுத்திருந்த குசல் பெரேரா, இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த இவர், எதிர்வரும் தென்னாபிரிக்க தொடருக்கு முன்னதான பயிற்சிகளை மேற்கொள்ள தீர்மானித்தார். பயிற்சிகளை மேற்கொள்ளவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குசல் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார். தற்போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தென்னாபிரிக்க தொடருக்கான குழாத்தில் குசல் பெரேரா இணைக்கப்படுவாரா? என்பது தொடர்பில் கேள்வியெழுந்துள்ளது.

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், எதிர்வரும் 2ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…