ஜோன் கீல்ஸ் அணியின் அபாரப் பந்துவீச்சினால் வீழ்ந்த DHT சீமெந்து

216

பெயார் என் லவ்லி மென் (Fair & Lovely Men) நிறுவனத்தின் அனுசரனையோடு பிரிவு – B வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்றைய நாளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

DHT சீமெந்து எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B)

குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட இந்த போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் இலகுவாக  DHT சீமெந்து அணியை வீழ்த்தியது.

முன்னதாக MCA மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற DHT நிறுவனம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய DHT சீமெந்து அணி வீரர்களுக்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நெருக்கடி தந்தனர். இதனால் 24.4 ஓவர்களில் DHT சீமெந்து அணி 74 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் அபாரம் காட்டியிருந்த சசிந்து பெரேரா 4 விக்கெட்டுகளையும் அப்தாப் காதர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 75 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மனோஜ் சரத்சந்தர ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 40 ஓட்டங்களின் துணையுடன் வெற்றி இலக்கை அடைந்தது

போட்டியின் சுருக்கம்

DHT சீமெந்து – 74 (24.4) – தசுன் செனவிரத்ன 24, அப்தாப் காதர் 3/18, நுவன் துஷார 2/7, சசிந்து பெரேரா 4/14

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 76/1 (9.1) – மனோஜ் சரத்சந்தர 40*


மொபிடெல் எதிர் மாஸ் சிலுவேட்டா

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் மொபிடல் நிறுவனத்தை மாஸ் சிலுவேட்டா வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாஸ் சிலுவேட்டா அணியால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த மொபிடெல் அணி 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அதிகபட்சமாக லக்ஷன் ஜயசிங்க ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை மொபிடெல் அணிக்காக பெற்றிருந்தார். மாஸ் சிலுவேட்டா அணி சார்பாக பந்து வீச்சில் சரண நாணயக்கார 3 விக்கெட்டுகளையும், நிமந்த மதுஷங்க, அஞ்செலோ இமானுவேல் மற்றும் புத்திக்க சஞ்சீவ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல

இதனையடுத்து வெற்றி இலக்கான 157 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணியானது இரோஷ் சமசூரியவின் அரைச்சதத்தோடு 36 ஓவர்களுக்கு 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

மொபிடெல் அணி சார்பாக பந்து வீச்சில் கோஷான் ஜயவிக்ரம மற்றும் ரங்கன ராஜபக்ஷ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்ட போதிலும் அது எதிரணியை கட்டுப்படுத்த போதுமாக அமைந்திருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

மொபிடெல் – 156 (41.5) – லக்‌ஷான் ஜயசிங்க 32*, கோஷான் தனுஷ்க 32, சுபேஷல ஜயத்திலக்க 24, லஹிரு சமரக்கோன் 22, சரண நாணயக்கார 3/21, நிமந்த மதுஷங்க 2/17, அஞ்செலோ இமானுவேல் 2/28, புத்திக்க சஞ்சீவ 2/31

மாஸ் சிலுவேட்டா – 159/5 (36) – இரோஷ் சமரசூரிய 51, தெனுவன் ராஜகருன 31*, நிமந்த மதுஷங்க 28, சங்கீத் கூரே 24, கோஷான் ஜயவிக்ரம 2/32, ரங்கன ராஜபக்ஷ 2/27


யுனிலிவர் எதிர் சிங்கர்

மக்கோன சர்ரே மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 75 ஓட்டங்களால் யுனிலிவர் நிறுவனம் சிங்கர் நிறுவனத்தை வீழ்த்தியது.

சீரற்ற காலநிலை காரணமாக இன்னிங்சுக்கு 43 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யுனிலிவர் லங்கா அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெர்வு செய்தனர். தொடர்ந்து மதுச ராஜரத்ன பெற்றுக்கொண்ட 35 ஓட்டங்கள் மற்றும் ஹரிஷ்னாத் ராஜேந்திரன் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்களின் உதவியோடு 43 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை யுனிலிவர் லங்கா பெற்றுக்கொண்டது.

சிங்கர் நிறுவன சார்பாக பந்துவீச்சில் பசிந்து தில்ஷான் மற்றும் பிரஷான் வீரவர்ண ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய சிங்கர் லங்கா நிறுவனத்தினர் 30 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி மீண்டும் சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் நிலைமை சீராகாத காரணத்தினால் 75 ஓட்டங்களால் டக்வத் லூயிஸ் முறையில் யுனிலிவர் நிறுவனம் வெற்றிபெற்றுக் கொண்டது. யுனிலிவர் லங்கா அணி சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹரிஷ்நாத் ராஜேந்திரன் 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யுனிலிவர் – 178/7 (43) – மதுஷ ராஜரத்ன 35, ஹரிஷ்நாத் ராஜேந்திரன் 32*, சமிந்த பெரேரா 20, பசிந்து தில்ஷான் 2/35,  பிரஷான் வீரவர்ண 2/32

சிங்கர் – 103/9 (30) – பசிந்து தில்ஷான் 28, ஹரிஷ்நாத் ராஜேந்திரன் 3/34, யொமேஷ் ரணசிங்க 2/19, கிஹான் டி சொய்ஸா 2/27