இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளை சொந்த மண்ணில் சந்திக்கவுள்ள தென்னாபிரிக்கா

126
Dhananjaya de Silva

பொக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் இங்கிலாந்து அணியுடன் இருதரப்பு தொடரிலும் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலும் விளையாடும் வகையில் தென்னாபிரிக்க அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அணிகளின் தரப்படுத்தலில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூவகையான கிரிக்கெட் விளையாட்டிலும் தரப்படுத்தலில் மூன்றாமிடத்தில் காணப்படும் அணியான தென்னாபிரிக்க அணி சொந்த மண்ணில் அடுத்து விளையாடவுள்ள இருதரப்பு தொடர்களுக்கான அட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (24) வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு முன்னரே அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உபாதை

தென்னாபிரக்காவுக்கு எதிராக காடிப்பில் இன்று (24) நடைபெறும் உலகக் கிண்ண பயிற்சிப்….

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா இருதரப்பு தொடர்

இங்கிலாந்து அணியை தங்களது சொந்த மண்ணுக்கு அழைத்து மூவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ளது. இவ்வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ள குறித்த இருதரப்பு தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான குறித்த இருதரப்பு தொடரானது டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் அடுத்த வருடம் (2020) பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாகவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் அட்டவணை

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

26 – 30 டிசம்பர் – முதலாவது டெஸ்ட் போட்டி – செஞ்சூரியன்

3 – 7 ஜனவரி 2020 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – கேப்டவுண்

16 – 20 ஜனவரி 2020 – மூன்றாவது டெஸ்ட் போட்டி – போர்ட் எலிசபெத்

24 – 28 ஜனவரி 2020 – நான்காவது டெஸ்ட் போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர்

4 பெப்ரவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – கேப்டவுண்

7 பெப்ரவரி – இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – டேர்பன்

9 பெப்ரவரி – மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்

12 பெப்ரவரி – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஈஸ்ட் லண்டன்

14 பெப்ரவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – டேர்பன்

16 பெப்ரவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – செஞ்சூரியன்

அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க இருதரப்பு தொடர்

இங்கிலாந்து அணியுடனான மூவகையான தொடர்களும் நிறைவடைந்ததன் பின்னர் தென்னாபிரிக்க அணி குறுகிய காலப்பகுதிக்குள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களில் விளையாடவுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான அனைத்து தகுதியும் எனக்கு உண்டு: திமுத்

உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகத் …

பெப்ரவரி மாதம் (2020) 21ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியில் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆகிய இரு தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன.

தொடர் அட்டவணை

மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்

21 பெப்ரவரி – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க்

23 பெப்ரவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – போர்ட் எலிசபெத்

26 பெப்ரவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – கேப்டவுண்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர்

29 பெப்ரவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – பார்ல்

4 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – ப்லூம்பொன்டைன்

7 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – பொட்சிப்ட்ரூம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<