சிங்கர் நிறுவனத்திற்கு எதிராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் இலகு வெற்றி

117

பெயார் என்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையோடு பிரிவு B வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று (27) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் சிங்கர் நிறுவனம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி சிங்கர் நிறுவன அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக தோற்கடித்தது.

டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

நேற்று (26) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர்…

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சிங்கர் நிறுவன அணி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 84 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சிங்கர் நிறுவன அணியில் ஹர்ஷ மதுரங்க மட்டுமே இருபது ஓட்டங்களை (24) கடந்தார்.

இதேநேரம் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பாக சச்சித்த ஜயத்திலக்க வெறும் 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அக்தப் காதர் மற்றும் மலிங்க அமரசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 85 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 10.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் வெற்றிக்கு மலிந்த மதுரங்க 36 ஓட்டங்களுடன் உதவியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சிங்கர் நிறுவனம் – 84 (32) – ஹர்ஷ மதுரங்க 24, ச்சித்த ஜயத்திலக்க 5/12, மலிங்க அமரசிங்க 2/12, அக்தாப் காதர் 2/19

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 85/3 (10.3) – மலிந்த மதுரங்க 36, ச்சித்த ஜயத்திலக்க 27*, டெவின் விஜேயந்திரன் 2/29

முடிவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி


கொமர்ஷல் கிரடிட் (B) எதிர் யுனிலிவர் ஸ்ரீ லங்கா

கொழும்பு BRC மைதானத்தில் நிறைவுக்கு இந்த ஆட்டத்தில் யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணி ஒரு விக்கெட்டினால் கொமர்ஷல் கிரடிட் அணியை வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கொமர்ஷல் கிரடிட் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 208 ஓட்டங்களை குவித்தது.  கொமர்ஷல் கிரடிட் அணி சார்பான துடுப்பாட்டத்தில் அதீஷ திலன்ச்சன (77) மற்றும் சந்தகன் பத்திரன (61) ஆகியோர் அரைச்சதம் குவித்தனர்.

மறுமுனையில் யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணியின் பந்துவீச்சு சார்பாக கிஹான் டி சொய்ஸா மற்றும் யோமேஷ் ரணசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை…

தொடர்ந்து ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 209 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டியது.

எனினும், யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணியின் துடுப்பாட்ட வீரரான மிலிந்த வீரசிங்க போராட்டமான ஆட்டத்துடன் அரைச்சதம் ஒன்றை குவித்தார். இந்த அரைச்சத உதவியுடன் யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணி போட்டியின் வெற்றி இலக்கினை 31.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களுடன் அடைந்தது.

யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணியின் வெற்றிக்கு உதவிய மிலிந்த வீரசிங்க 69 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேவேளை கொமர்ஷல் கிரடிட் அணிக்காக அனுர டயஸ் மற்றும் அரவிந்த வர்ணசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்த போதிலும் அது அவர்களின் தரப்பிற்கு வெற்றியை சுவைக்க போதுமாக இருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் (B) – 208 (37.4) – அதீஷ திலன்ச்சன 77, சந்தகன் பத்திரன 61, சனித்த டி மெல் 25, கிஹான் டி சொய்ஸா 3/53, யொமேஷ் ரணசிங்க 3/29

யுனிலிவர் ஸ்ரீ லங்கா – 209/9 (31.2) – மிலிந்த வீரசிங்க 69, அனுர டயஸ் 3/61, அரவிந்த வர்ணசூரிய 3/26

முடிவு யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க