இலங்கை அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான அனுசரணையாளராக JAT HOLDINGS

180

இலங்கை மக்களின் மனம்கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜெட் ஹோல்டிங்ஸ் (JAT HOLDINGS) நிறுவனம் 2020/2021 பருவகாலத்துக்காக எதிர்வரும்

மே மாதம் 31ஆம் திகதி வரை இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக செயற்படவுள்ளது.

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான JAT HOLDINGS நிறுவனம், இறுதியாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஆகியவற்றின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டிருந்தது.

>>ப்ரீமியர் லீக் T20 தொடரின் முதல் நாளில் அசத்திய சதீர, ப்ரியமால் மற்றும் தனஞ்சய லக்ஷான்

இந்தநிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் JAT HOLDINGS நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக அனுசரணை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இதன்படி, தற்போது நடைபெற்று வருகின்ற மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மற்றும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான பிரதான அனுசரணையாளராக ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>Video – தலைவராக மீண்டும் சாதிப்பாரா ANGELO MATHEWS? | Sports RoundUp – Epi 151

இதேநேரம், குறித்த அனுசரணை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுடனான டெஸ்ட் தொடர், தற்போது நடைபெற்று வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 மற்றும் ஒருநாள் தொடர்கள், ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் என்பவற்று ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்தமை தொடர்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கிரிக்கெட்டில் கூட்டாண்மை எப்போதும் முன்னுரிமை பெறுகிறது. இந்த கூட்டாண்மை இன்னும் இன்னும் வலுப்பெறும்போது, JAT HOLDINGS நிறுவனத்தின் நாமத்தையும் சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கு என நம்புகிறேன்.

விளையாட்டு என்பது ஒற்றுமையின் சின்னமாகும். இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவரை ஒரு சரியான நபராக மாற்றுவதோடு அனைவரையும் ஒன்றிணைக்கும் திறனும் விளையாட்டுக்கு உண்டு என்று ஏஷ்லி டி சில்வா கூறினார்.

முன்னதாக நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடர், 2017இல் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணம், பங்களாதேஷில் நடைபெற்ற BPL போட்டித் தொடர் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் JAT HOLDINGS நிறுவனம் அனுசரணையாளராக செயற்பட்டது.

>>இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங்க?

இதுஇவ்வாறிருக்க, 2020 – 2023 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு அனுசரணையாளராக ITW Consulting தனியார் நிறுவனம் செயற்பட்டு வருவதுடன், அவர்களின் வழிகாட்டலுடன் JAT HOLDINGS நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைகோர்த்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<