சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்கள் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான போட்டி மத்தியஸ்தராக நியூசிலாந்தின் ஜெப் க்ரோவ் செயற்படவுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு நடுவர்களாக தென்னாப்பிரிக்காவின் ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
>>ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்<<
இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி, லிண்டல் ஹெனிபல் மற்றும் ப்ரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் போட்டி நடுவர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 10ஆம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுவர்கள் குழாம்
- ஜெப் க்ரோவ் (போட்டி மத்தியஸ்தர்)
- ஏட்ரியன் ஹோல்டஸ்டொக் (நடுவர்)
- ஜொயல் வில்சன் (நடுவர்)
- ரவீந்திர விமலசிறி (நடுவர்)
- ருச்சிர பல்லியகுருகே (நடுவர்)
- லிண்டல் ஹெனிபல் (நடுவர்)
- பிரகீத் ரம்புக்வெல்ல (நடுவர்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<