24ஆவது மேகன்டைல் லீக் சம்பியனாக மார்ஸ் யுனிசெலா தெரிவு

236
Mercantile Cricket

கொழும்பில் இடம்பெற்ற லீக் மட்டத்திலான இறுதி நான்கு போட்டிகளினதும் முடிவுகளின்படி, மார்ஸ் யுனிசெலா அணி சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

யுனிசெலா அணி, தாம் விளையாடிய 7 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று மொத்தமாக 28 புள்ளிகளைப் பெற்றது. அதற்கு அடுத்த படியாக ஜோன் கீல்ஸ் அணி, தாம் விளையாடிய 7 போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று 27 புள்ளிகளைப் பெற்றது. யுனிசெலா அணி 4 மேலதிக புள்ளிகளையும், ஜோன் கீல்ஸ் அணி 3 மேலதிக புள்ளிகளையும் பெற்றமையினாலேயே இரு அணிகளுக்கும் இடையில் இந்த ஒரு புள்ளி வித்தியாசம் இருந்தது. எனினும் கடந்த முறை சம்பியனாகத் தெரிவாகிய மாஸ் அக்டிவ் அணி இம்முறை அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து பட்டியலில் இறுதி இடத்தைப் பெற்றது.

லீக் சுற்றின் இறுதி நிலை

  1. மாஸ் யுனிசெலா
  2. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்
  3. கொமர்ஷியல் கிரெடிட்
  4. சம்பத் வங்கி
  5. டிமொ
  6. டெக்ஸ்ஷர்ட் ஜேர்சி
  7. ஹட்டன் நஷனல் வங்கி
  8. மாஸ் அக்டிவ்

 

மாஸ் யுனிசெலா எதிர் டிமொ

பி.சரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் மஹேல உடவத்தவின் சிறப்பான ஆட்டத்தினால் பெறப்பட்ட 87 ஓட்டங்கள் மாஸ் யுனிசெலா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

போட்டியில் முதலில் துடுக்பெடுத்தாடிய டிமொ அணியினர் 229 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹஷான் துமிந்து 82 பந்துகளுக்கு முகம்கொடுத்து 66 ஓட்டங்களை பெற்றார். அதுபோன்று அவ்வணியின் ஜேசன் பெரேரா 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் 230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மாஸ் யுனிசெலா அணியினர் 38.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து மேலதிகமான ஒரு புள்ளியையும் பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய உடவத்த 87 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்களாக 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனையவர்கள் அதிக அளவிலான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

டிமொ – 229/10 (47.1): ஹஷான் துமிந்து 66, ஜசொன் பெரேரா 44, லசித் அபேரத்ன 20, டில்ருவன் பெரேரா 48/3, மலிங்க பண்டார 39/2, பர்வீஸ் மஹ்ரூப் 50/2

மாஸ் யுனிசெலா – 230/6 (38.2): மஹேல உடவத்த 87, டில்ஷான் 28, ஷாமர சில்வா 28, தனுஷ்க குனதிலக 27, ரமேஷ் மென்டிஸ் 37/2, நிசல தாரக 49/2


ஜோன் கீல்ஸ் எதிர் சம்பத் வங்கி

கடுநாயக FTZ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் விகும் பண்டார மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் சிறந்த பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சம்பத் வங்கி அணி 100 ஓட்டங்களைக் கூட பெற முடியாமல் திண்டாடியது.

சம்பத் வங்கி அணியினர் ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் இளம் வீரர் ஷமிக் கருனாரத்ன மாத்திரம் ஓரளவு சிறப்பாக ஆடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் இலகுவான இலக்கை நோக்கி ஆடிய ஜோன் கீல்ஸ் அணியினர் அதிரடியாக ஆடினாலும் தமது 5 விக்கெட்டுக்களை இழந்தே வெற்றி இலக்கை அடைந்தனர். கசுன் ராஜித்த சிறப்பாக பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

சம்பத் வங்கி – 99/10 (25.4): ஷமிக கருனாரத்ன 30, ப்ரிமோஷ் பெரேரா 21, விகும் பண்டார 32/3, பானுக ராஜபக்ஷ30/3, உபுல் இன்த்ரசிறி 10/2

ஜோன் கீல்ஸ் – 102/5 (13.2): சன்தன் வீரக்கொடி 40, கசுன் ராஜித்த 40/4  


ஹட்டன் நஷனல் வங்கி எதிர் மாஸ் அக்டிவ்

தர்ஸ்டன் கல்லூரியின் முன்னாள் வீரரான மின்ஹாஜ் ஜலிலின் சிறந்த சகலதுறை ஆட்டத்தினால் ஹட்டன் நஷனல் வங்கி 3 விக்கெட்டினால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மாஸ் அக்டிவ் அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அன்ஜெலோ பெரேரா மாத்திரம் சிறப்பாக ஆடி 87 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய HNB அணி சார்பாக ஜலில் 134 பந்துகளில் 122 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உள்ளடங்கும். அதன்படி, 45 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து அவ்வணி வெற்றி இலக்கை அடைந்தது.

மாஸ் அக்டிவ் – 219/10 (48.1): அன்ஜெலோ பெரேரா 87, சம்பத் 29, மின்ஹாஜ் ஜெலில் 45/3, கோசல குலசேகர 44/2,

HNB – 221/7 (45): மின்ஹாஜ் ஜலில் 122, சசின் ஜயவர்தன 20, லசித் எபுல்தெனிய 36/4, சேரசிங்க 48/2


கொமர்ஷியல் கிரெடிட் எதிர் டெக்ஸ்ஷர்ட் ஜேர்சி

மொரட்டுவை டிரொன் பெர்னான்டோ விளையாட்ரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் லஹிரு மதுசங்க மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரின் சிறந்த பந்து வீச்சினால் கொமர்ஷியல் கிரெடிட் அணி வெற்றி பெற்று இறுதித் தரப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டெக்ஸ்ஷர்ட் ஜேர்சி அணி 29 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய கொமர்ஷியல் கிரெடிட் அணி 29 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

டெக்ஸ்ஷர்ட் ஜேர்சி – 99/10 (29.3): மினொட் பானுக 47, லஹிரு மதுசங்க 18/4, செஹான் ஜயசூரிய 40/3

கொமர்ஷியல் கிரெடிட் – 103/4 (18.1): செஹான் ஜயசூரிய 29, சுராஜ் ரன்திவ் 27, லஹிரு மதுசங்க 24, நுவன் ப்ரதீப் 15/2, ஷலன டி சில்வா 43/2