அவிஷ்க பெர்னாண்டோவின் இரட்டைச் சதத்துடன் முன்னிலை பெற்ற கோல்ட்ஸ் கழகம்

245

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் மூன்றாவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று (31) ஆரம்பமாகின.

இதில் கோல்ட்ஸ் கழகத்தின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ இரட்டைச்சதம் அடித்து அசத்த, அதே கழகத்தைச் சேர்ந்த சங்கீத் குரே, இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஹிமாஷ லியனகே மற்றும் டில்ஷான் டி சொய்சா, NCC கழகத்தின் அஞ்செலோ பெரேரா ஆகியோர் சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர். இதேநேரம், சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் லஹிரு மதுஷங்க பந்துவீச்சில் ஜொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் அயர்லாந்து A அணியை வைட்வொஷ் செய்த இலங்கை A

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று முடிந்திருக்கும்


கோல்டஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இலங்கை A அணிக்காக விளையாடி வருகின்ற இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் இரட்டைச் சதம் மற்றும் சங்கீத் குரேயின் சதம் என்பவற்றின் உதவியுடன் இராணுவ அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையில் உள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கோல்ட்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ இரட்டைச் சதம் கடந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், முதல்தரப் போட்டிகளில் தனது கன்னி இரட்டைச் சதத்தையும் பதிவு செய்தார்.

அத்துடன், இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 212 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 சிக்ஸர்கள் மற்றும் 30 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த அயர்லாந்து A அணியுடனான ஒருநாள் போட்டியில் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்களைக் பெற்றுக்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ, குறித்த போட்டித் தொடரில் 523 ஓட்டங்களையும் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரர் அவிஷ்க பெர்னாண்டோ 223 ஓட்டங்களையும், சங்கீத் குரே 142 ஓட்டங்களையும் அவ்வணிக்காக அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 414/2 (90) – அவிஷ்க பெர்னாண்டோ 223, சங்கீத் குரே 142, ஹஷான் துமிந்து 46*


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் லஹிரு மதுஷங்கவின் அபார பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்சுக்கு 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. லஹிரு மதுஷங்க 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மற்றுமொரு பேரிழப்பினை சந்திக்கும் அபாயத்தில் இலங்கை அணி

முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், இடுப்பு உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளை

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் முதலில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் ஓஷத பெர்னாண்டோ (63) மாத்திரம் அரைச்சதம் ஒன்றைப் பெற்றார்.

Photo Album : Chilaw MCC Vs CCC | Major Super 8s Tournament 2018/19

அத்துடன், இம்முறை முதல்தரப் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார். கடந்தவாரம் நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுக்கான போட்டியொன்றில் கோல்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற ஓஷத, இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டைச் சதமொன்றையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இதன்படி, முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களை அந்த அணி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 186 (48.2) – ஓஷத பெர்னாண்டோ 52, ரிசித் உபமால் 36, இரோஷ் பெர்னாண்டோ 26, லஹிரு மதுஷங்க 6/51, மாலிந்த புஷ்பகுமார 3/84

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 123/6 (33) – மினோத் பாணுக்க 40, அஷான் பிரியன்ஜன் 22, சாகர் பரேஷ் 3/21


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

இளம் வீரர் ஹிமாஷ லியனகே மற்றும் டில்ஷான் டி சொய்சா ஆகியோரின் சதத்தின் உதவியுடன் சரெசன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக இராணுவ விளையாட்டுக் கழகம் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கட்டுநாயக்க மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இராணுவ விளையாட்டுக் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 318 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

22 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் ஹிமாஷ லியனகே 116 ஓட்டங்களையும், டில்ஷான் டி சொய்சா 101 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, சன்ஜிக ரித்ம ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 318/7 (89.2) – ஹிமாஷ லியனகே 116, டில்ஷான் டி சொய்சா 101, சன்ஜிக ரித்ம 50*, சாமிகர எதிரிசிங்க 3/81, சச்சித்ர பெரேரா 2/30

தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெறும் மூன்று நாட்களில் முடிவை எட்டியிருந்த


NCC எதிர் SSC

பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பாடிய NCC அணி, அஞ்செலோ பெரேராவின் சதம் மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் அரைச்சதம் என்பவற்றின் உதவியுடன் 8 விக்கெட்டுக்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றது.

Photo Album : NCC Vs SSC | Major Super 8s Tournament 2018/19

NCC அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா ஆட்டமிழக்காது 152 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்க்க, இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 95 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 376/8 (90) – அஞ்செலோ பெரேரா 152*, பெதும் நிஸ்ஸங்க 95, லசித் அம்புல்தெனிய 26, தம்மிக பிரசாத் 3/70, ஆகாஷ் சேனாரத்ன 2/78

சகல போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க