தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

410

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெறும் மூன்று நாட்களில் முடிவை எட்டியிருந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கென்பெராவில் உள்ள மனூகா ஓவல் மைதானத்தில் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ள….

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில், இலங்கை அணி தொடர் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளது.

முதல் போட்டியை பொருத்தவரை இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் ஏமாற்றமுடைய போட்டியாக அமைந்திருந்தது. அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் நிரோஷன் டிக்வெல்ல மாத்திரம் ஒரு அரைச் சதத்தினை விளாசியிருந்த நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் மோசமாக ஆடியிருந்தனர். இதில் சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் அணியில் இணைந்திருந்த லஹிரு திரிமான்னே சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், அணிக்கு அவரின் துடுப்பாட்டம் போதுமானதாக அமையவில்லை.

அதுமாத்திரமின்றி, அணியின் பந்து வீச்சாளர்களின் உபாதைகளும் இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்ததுடன், குமார பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனால், இலங்கை அணியால் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிக்கு அதிகமான அழுத்தங்களை கொடுக்க முடியவில்லை. எனினும், சுரங்க லக்மால் தனியாளாக நின்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சை பலப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்திருந்தார்.

Photo Album : Sri Lanka Practices ahead of 2nd Test Match in Canberra

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரையில், இந்திய அணியிடம் சொந்த மண்ணில் பெற்ற தோல்வியை, இலங்கை அணிக்கு எதிரான வெற்றி சற்று மறக்கடித்துள்ளது. அத்துடன், தொடர் தோல்வியை சந்தித்து வந்த அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கை மட்டத்தை இந்த வெற்றி அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

அதேநேரம், இந்த டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணி தங்களின் அனைத்து துறைகளிலும் சற்று எழுச்சியை கண்டிருந்ததை பார்க்க முடிந்தது. முக்கியமாக ட்ராவிஷ் ஹெட் மற்றும் மெர்னஸ் லெபுச்செங் ஆகியோரின் துடுப்பாட்டம் மத்திய வரிசையில் ஆஸி. அணியை முன்னேற்றியிருந்தது. அத்துடன், பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. எனினும், அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிச்சல் ஸ்டார்க்கின் ஒத்துழைப்பு அணிக்கு எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு கிடைத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. கேப்டவுன் விவகாரத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும், அவுஸ்திரேலிய அணிக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றினை வெல்லுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட ….

அதேபோன்று, இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு முகற்கொடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் டெஸ்ட் தொடர்களை இழந்திருந்த இலங்கை அணி, மற்றுமொரு தொடர் தோல்வியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு இந்த போட்டியில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு அணிகளினதும் கடந்த கால மோதல்கள்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில், அவுஸ்திரேலிய அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இதுவரை மோதிய 12 தொடர்களில் 10 இல் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளதுடன், இலங்கை 2 தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இலங்கை அணி வெற்றிபெற்ற போதும், அவுஸ்திரேலியாவில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. அதேநேரம், அவுஸ்திரேலியாவில் விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்தேச பதினொருவர்

இலங்கை

திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால் (தலைவர்), ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித

அவுஸ்திரேலியா

ஜோ பர்ன்ஸ், மார்கஸ் ஹெரிஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன், டிம் பெய்ன் (தலைவர்), நெதன் லயன், மெர்னஸ் லெபுச்செங், பீட்டர் சிட்ல், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன்

எதிர்பார்ப்பு வீரர்கள்

  • திமுத் கருணாரத்ன

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களில் ஒருவாக பார்க்கப்படும் திமுத் கருணாரத்ன, கடந்த வருடத்தில் சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார். அணியின் நம்பிக்கைக்குறிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர், கடந்த வருடம் மாத்திரம் 46.63 என்ற ஓட்ட சராசரியில் 743 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை குழாத்துடன் இணையவுள்ள புதுமுக சகலதுறை வீரர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல்…

அதுமாத்திமின்றி 2018ம் ஆண்டின் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையினை பெற்றுக்கொண்ட இவர், ஐசிசி வெளியிட்டிருந்த 2018ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

திமுத் கருணாரத்ன
  • பெட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான பெட் கம்மின்ஸ், கடந்த சில மாதங்களாக அணியின் பந்துவீச்சை பலப்படுத்தி வருகின்றார் ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் பீட்டர் சிட்ல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்து வெளியேறிய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருந்தார்.

பெட் கம்மின்ஸ்

அத்துடன், கடந்த வருடம் சிறந்த பந்துவீச்சினை வெளியிப்படுத்தியிருந்த இவர், 16 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மைதானம் மற்றும் ஆடுகள நிலைமை

கென்பெராவில் உள்ள மனூகா ஓவல் மைதானமானது இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலம், டெஸ்ட் அறிமுகத்தை பெறவுள்ளது. இந்த மைதானத்தில் ஏற்கனவே ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள போதிலும் முதல் தடவையாக சர்வதேச டெஸ்ட் போட்டியொன்று நடைபெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

மைதானத்தை பொருத்தவரை மிகச்சிறிய மைதானம் என்பதுடன் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகன ஆடுகளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வேகப்பந்து வீச்சு எடுபடக்கூடிய சூழ்நிலை காணப்படுவதுடன், போட்டியின் நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் மழை குறுக்கிடவும் வாய்ப்புள்ளது. 

எனவே, நாளை ஆரம்பமாகவுள்ள போட்டி அவுஸ்திரேலிய அணியினருக்கு தொடரை வெல்லுவதற்கான போட்டியாக அமைந்தாலும், இலங்கை வீரர்களுக்கு வரலாற்றில் ஆஸி. மண்ணில் முதல் வெற்றியைப் பெறுவதற்கான போட்டியாக அமையவுள்ளது.