SSC கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சச்சித்ர சேனநாயக்க

183

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இறுதி வாரத்துக்கான நான்கு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (08) நிறைவுக்கு வந்தன.

இதில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக ரொன் சந்த்ரகுப்தா மற்றும் மினோத் பாணுகவும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக பிரியமால் பெரேராவும் சதங்களைப் பெற்றுக்கொள்ள, SSC கழகத்தின் சச்சித்ர சேனாநாயக்க 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி பிரகாசித்திருந்தார்.

மேஜர் ப்ரீமியர் லீக்கில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த பெதும் நிஸ்ஸங்க

இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் ஆயிரம்…

SSC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

சச்சித்ர சேனாநாயக்கவின் சகலதுறை ஆட்டத்தினால் சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC  கழகம் 100 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த SSC கழகம் 374 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணிக்காக சச்சித்ர சேனாநாயக்க 89 ஓட்டங்களையும், சம்மு அஷான் 79 ஓட்டங்களையும், ஆகாஷ் சேனாரத்ன 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுசேர்த்தனர்.

இந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் ஆட்ட நேர முடிவின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் திக்‌ஷில டி சில்வா 72 ஓட்டங்களையும், புலின தரங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்திய சச்சித்ர சேனாநாயக்க 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 374 (101) – சச்சித்ர சேனநாயக்க 89, சம்மு அஷான் 79, ஆகாஷ் சேனாரத்ன 56, நிபுன் தனன்ஞய 46, சாகர் பரேஷ் 4/138, புலின தரங்க 3/58

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 274 (73.3) – திக்ஷில டி சில்வா 72, புலின தரங்க 51, நிமேஷ் விமுக்தி 40, சச்சித்ர சேனநாயக்க 6/73


NCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இளம் துடுப்பாட்ட வீரர்களான ரொன் சந்திரகுப்தா மற்றும் மினோத் பாணுகவின் அபார சதங்களின் உதவியோடு NCC கழகத்திற்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய NCC கழகம் முதல் இன்னிங்சுக்காக 411 ஓட்டங்களைப் பெற்றது.

ஜப்னா சுப்பர் லீக் இறுதி மோதலில் வேலணை வேங்கைகள் – ஜப்னா பந்தேர்ஸ்

முதலாவது ஜப்னா சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடர் இறுதிக் கட்டத்தினை…

துடுப்பாட்டத்தில் மஹேல உடவத்த 162 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 119 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரொன் சந்திரகுப்தா சதம் கடந்து 118 ஓட்டங்களையும், மினோத் பாணுக 104 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதன்படி, இம்முறை கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளில் ரொன் சந்திரகுப்தா தனது முதல் சதத்தைப் பெற்றுக்கொள்ள, மினோத் பாணுக 3 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 411 (104.3) – மஹேல உடவத்த 162, பெதும் நிஸ்ஸங்க 119, லஹிரு உதார 35, வனிந்து ஹசரங்க 4/63, அஷான் பிரியன்ஜன் 2/52, லஹிரு மதுஷங்க 2/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 322/3 (74) – ரொன் சந்திரகுப்தா 118, மினோத் பாணுக 104, அஷான் பிரியன்ஜன் 49*


கோல்டஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்கவில் நேற்று (07) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இளம் துடுப்பாட்ட வீரர்களான தனன்ஞய லக்‌ஷான் (141), பிரியமால் பெரேரா (127) மற்றும் விஷாட் ரந்திக (106) ஆகியோரது சதங்களின் உதவியுடன், தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 574 ஓட்டங்களப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பின்வரிசையில் களமிறங்கிய நிசல தாரக்க 89 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இராணுவ விளையாட்டுக் கழகம், இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d (148.1) – தனஞ்சய லக்‌ஷான் 141, பிரியமால் பெரேரா 127, விஷாட் ரந்திக 106, அவிஷ்க பெர்னாண்டோ 75, நிசல தாரக்க 55, அசேல குணரத்ன 2/40, நுவன் லியனபதிரன 2/67, புத்திக மதுஷங்க 2/91, தனுஷிக பண்டார 2/124

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 41/2 (14.2)


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

NCC கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸினை இன்று தொடர்ந்த தமிழ் யூனியன் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் மனோஜ் சரத்சந்திர, சிதார கிம்ஹான் மற்றும் தரங்க பரனவிதாரண ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் டேவிட் சாகர்…

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியது.

துடுப்பாட்டத்தில் அன்டி சொலமன்ஸ் 77 ஓட்டங்களைப் பெற்றுகொள்ள, அஷேன் பண்டார 88 ஓட்டங்களையும், பிரமோத் மதுவந்த 75 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 330 (101.4) – மனோஜ் சரத்சந்திர 68, சிதார கிம்ஹான் 52, தரங்க பரனவிதாரண 50, கமிந்து மெண்டிஸ் 41, ரமித் ரம்புக்வெல்ல 40, சாலிய சமன் 3/40, கமிந்து கனிஷ்க 3/74

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 264/4 (77) – அஷேன் பண்டார 88*, அன்டி சொலமன்ஸ் 77, பிரமோத் மதுவன்த 75*

சகல போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க