நிஷானின் சதம்; இஷானின் 5 விக்கெட்டுகளால் ராகம கழகத்துக்கு வெற்றி

Major Clubs Limited Over Tournament 2022

113
Major Clubs 50 Over Tournament 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (08) 10 போட்டிகள் நடைபெற்றன.

இதில் நுகேகொட கழகத்திற்கு எதிரான போட்டியில் 339 ஓட்டங்களைக் குவித்த ராகம கிரிக்கெட் கழகம், அந்த அணியை 183 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 156 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராகம கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க List A போட்டிகளில் கன்னி சதமடித்ததுடன், 165 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

மறுபுறத்தில் ராகம கழகத்துக்கான பந்துவீச்சில் அசத்திய இஷான் ஜயரட்ன, 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீpழ்த்தினார்.

இதனிடையே, முவர்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் 120 ஓட்டங்களைப் பதிவு செய்த SSC கழகம் 19 ஓட்டங்களால் த்ரில் வெற்றியீட்டி A குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தப் போட்டியில் SSC கழகத்தின் சஷிக டில்ஷான் 7 விக்கெட்டுகளையும், முவர்ஸ் கழகத்தின் தினுக டில்ஷான் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ கிரிக்கெட் கழகம் 103 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் குழு B இல் இதுவரை 6 போட்டிகளில் 5 இல் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் அந்த கழகம் முதலிடத்தைப் பிடித்தது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 339/6 (50) – நிஷான் மதுஷ்க 165, அவிஷ்க தரிந்து 45, தெவிந்து டிக்வெல்ல 38, ஜனித் லியனகே 35, அரவிந்த ப்ரேமரத்ன 2/55

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 183 (42.2) – நயன பெர்னாண்டோ 54, கெவின் பெரேரா 48, இஷான் ஜயரட்ன 5/35

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 156 ஓட்டங்களால் வெற்றி

SSC கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

SSC கழகம் – 120 (31.2) – தசுன் ஷானக 43, தினுக டில்ஷான் 6/41, சானுக டில்ஷான் 2/21

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 101 (24) – சொஹான் டி லிவேரா 59, சஷிக டில்ஷான் 7/28, நிபுன் தனன்ஜய 2/33

முடிவு – SSC கழகம் 19 ஓட்டங்களால் வெற்றி

இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 270/6 (50) – ஷெஹான் பெர்னாண்டோ 87*, அசேல குணரட்ன 63, சீக்குகே பிரசன்ன 32*, தரிந்து ருக்ஷான் 2/34, அருள் பிரகாஷ் 2/80

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 167 (39.2) – சஜித் பிரயலால் 39, மிதுன் ஜயவிக்ரம 25, சுமிந்த லக்ஷான் 3/36, சிஹத சொய்ஸா 4/27

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 103 ஓட்டங்களால் வெற்றி

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 192 (37.5) – பவன் ரத்நாயக்க 44, சமிந்து விஜேசிங்க 44, பவன்த வீரசிங்க 35, சச்சின்த பீரிஸ் 3/29, துவிந்து திலகரட்ன 3/42

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 175 (43) – லஹிரு சமரகோன் 84, சமிந்து விஜேசிங்க 3/25, அஷான் பிரியன்ஜன் 3/36

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 243/7 (50) – ரொஷான் விஜேநாயக 61, லக்ஷான் ரொட்ரிகோ 53, புலின தரங்க 5/46, கௌரவ் ஜாதர் 2/23

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 244/6 (48.3) – கசுன் விதுர 73, கௌரவ் ஜாதர் 48, கோஷான் தனுஷ்க 3/39

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 204/9 (50) – சுபுன் லீலாரத்ன 94, மதுர மதுஷங்க 27, கயான் சிறிசோம 3/30, மொவின் சுபசிங்க 2/30

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 176 (43.3) – மொவின் சுபசிங்க 62, ரஜித ரத்நாயக்க 26, சச்சித்ர சேனாநாயக்க 4/40, கசுன் ஏகநாயக்க 3/39

முடிவு – கடற்படை கழகம் 28 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 149 (35.3) – இன்ஷக சிறிவர்தன 38, விஷார பெர்னாண்டோ 26, ரொஹான் சன்ஜய 4/35, அகில தனன்ஜய 2/31

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 150/4 (32.4) – சங்கீத் குரே 69*, விஷாத் ரந்திக 44, இன்ஷக சிறிவர்தன 3/37

முடிவு – கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

செபஸ்டியநைட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

செபஸ்டியநைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 215/8 (50) – தரிந்து ரத்நாயக்க 47*, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 34, நுவன் பிரதீப் 2/37, நதீர பாலசூரிய 2/47

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 218/6 (35.5) – ஜிடான்ஸ் ஹேரா 107*, சதுரங்க ஜயதிலக்க 45, சச்சித்த ஜயதிலக்க 2/35

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 214/7 (50) – யஷ்பால் சிங் 84, மாதவ வர்ணபுர 45, சச்சிந்து கொலம்பகே 3/43, அசேல சிகேரா 2/36

NCC கழகம் – 217/7 (49) – சஹன் ஆரச்சிகே 53*, உபுல் தரங்க 37, சானக கோமசாரு 2/25

முடிவு – NCC கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி

காலி கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 121 (39) – கயான் மனீஷான் 40, சதுர லக்ஷான் 3/23, ஹரீன் புத்தில 2/14

காலி கிரிக்கெட் கழகம் – 122/2 (28.3) – டில்ஷான் காஞ்சன 63*, தெவின் அமரசிங்க 45

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<