இளையோர் ஆசியக் கிண்ணத்தில் தோல்வி காணாத அணியாக இந்தியா

196

இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (9) குழு A அணிகளின் முதற்சுற்றுப் போட்டிகள் யாவும் நிறைவுக்கு வந்தன. 

பாகிஸ்தான் எதிர் குவைட்

மொரட்டுவ டெரோன் பெர்னாந்து மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, குவைட் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை 163 ஓட்டங்களால் வீழ்த்தியது. 

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் தகுதி

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் 19……

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் குவைட், பாகிஸ்தான் ஆகிய இரு இளம் அணிகளும் ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து இப்போட்டியில் மோதின.  

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் இளையோர் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டது.  

அதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் தரப்பிற்கு இர்பான் கான், மொஹமட் ஹரீஸ் மற்றும் மொஹமட் வஸீம் ஜூனியர் ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றுக் கொடுத்தனர். 

Photos: Pakistan vs Kuwait – U19 Asia Cup 2019

இந்த மூன்று வீரர்களினதும் அரைச்சத உதவிகளோடு, பாகிஸ்தானின் கனிஷ்ட கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 335 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இர்பான் கான் 68 ஓட்டங்களை குவிக்க, மொஹமட் ஹரீஸ் 53 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், அதிரடியாக ஆடிய மொஹமட் வஸீம் ஜூனியர் வெறும் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அதேநேரம், குவைட் தரப்பின் பந்துவீச்சு சார்பில் ஜன்டு ஹமுட் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 336 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய குவைட் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 172 ஓட்டங்களை பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.  

குவைட் இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் அப்துல் சாதிக் 60 ஓட்டங்களை குவிக்க, கோவிந்த் குமார் 45 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இதேநேரம், பாகிஸ்தான் இளம் தரப்பின் பந்துவீச்சு சார்பில் காசிம் அக்ரம் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய மொஹமட் வஸீம் ஜூனியர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண வந்த ஆஸி. சிறுவன்

நான்கு வருடங்களாக குப்பைகளை அள்ளி அதன் மூலம் சேர்த்த….

இப்போட்டியின் மூலம் ஆறுதல் வெற்றி ஒன்றுடன் இளையோர் ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தான் நிறைவு செய்ய, எந்தவொரு வெற்றியினையும் பெறாத நிலையில் குவைட் இளம் கிரிக்கெட்  அணி ஏமாற்றம் அடைகின்றது.

போட்டியின் சுருக்கம் 

பாகிஸ்தான் இளையோர் – 335/9 (50) இர்பான் கான் 63, மொஹமட் வஸீம் ஜூனியர் 55*, மொஹமட் ஹரீஸ் 53, ஜன்டு ஹமுட் 60/4, அப்துல் சாதிக் 70/3

குவைட் இளையோர் – 172 (43.4) அப்துல் சாதிக் 60, கோவிந்த் குமார் 45, காஸிம் அக்ரம் 38/4, மொஹமட் வஸீம் ஜூனியர் 23/3 

முடிவுபாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 163 ஓட்டங்களால் வெற்றி  


இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான்

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் மோதிய இப்போட்டியில் இந்தியத்தரப்பு 3 விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவைத்தது. 

மேலும் இந்த வெற்றி, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கிடைத்த தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகவும் அமைந்தது. 

கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் இளம் அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு சரித்திர வெற்றி

பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள….

ஆப்கானிஸ்தான் இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த அபிதுல்லா தனிவால் 39 ஓட்டங்களை குவித்திருக்க, ஏனைய அனைவரும் மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

இதேநேரம் இந்திய இளம் அணியின் பந்துவீச்சில் சுஷாந்த் மிஷ்ரா வெறும் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற, அதர்வா அன்கலோக்கர் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த 125 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியின் இளம் வீரர்கள் தடுமாற்றம் காண்பித்திருந்தனர்.

எனினும், பின்வரிசை வீரர்களின் போராட்டம் காரணமாக இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி போட்டியின் வெற்றி இலக்கினை 38.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை சலில் அரோரா, சஸ்வத் ராவத் ஆகியோர் தலா 29 ஓட்டங்கள் வீதம் குவித்து உறுதி செய்திருந்தனர்.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் நூர் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை சாய்த்தும், சபிகுல்லாஹ் காபாரி 2 விக்கெட்டுக்களை சாய்த்தும் இந்திய தரப்பிற்கு அழுத்தம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 124 (40.1) அபிதுல்லா தனிவால் 39, சுஷாந்த் மிஷ்ரா 20/5, அதர்வா அன்க்லோக்கேர் 16/4

இந்தியா – 128/7 (38.4) சலில் அரோரா 29, சஷ்வந்த் ராவத் 29, நூர் அஹ்மட் 30/4, சபிகுல்லாஹ் காபாரி 29/2

முடிவுஇந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<