நெய்மர் இல்லாமல் பார்சிலோனாவை சந்திக்கவுள்ள PSG

111
Getty Images

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் நட்சத்திர முன்கள வீரரான நெய்மர், தனது தொடை பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சம்பியன்ஸ் கிண்ண 16 அணிகள் சுற்றில், பார்சிலோனாவிற்கு எதிரான முதலாவது போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த வியாழக்கிழமை கான்(CAEN) அணிக்கெதிராக இடம்பெற்ற பிரெஞ்சு கிண்ண போட்டியில் விளையாடிய நெய்மர், போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரால் உபாதைக்குள்ளாக்கப்பட்டார். தொடர்ந்து போட்டியிலிருந்து வெளியே அழைக்கப்பட்ட அவர், பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டார்.

இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

அந்த பரிசோதனைகளின் முடிவில், தொடையில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக, நெய்மர் அடுத்த நான்கு வாரங்களுக்கு கால்பந்து விளையாட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதாக PSG நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண 16 அணிகள் சுற்று போட்டிகளில், PSG அணி தமது முதல் சுற்று ஆட்டத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி பார்சிலோனா அணியை  காம்ப்னோ(CAMPNOU) அரங்கில் சந்திக்கவுள்ளது. இந்த போட்டியில் 29 வயதான நெய்மர் தற்பொழுது விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம்  10ஆம் திகதி சொந்த மைதானத்தில், தனது முன்னாள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டியில் நெய்மர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டு குழுக்களாக மோதல் இடம்பெறவுள்ள சுபர் லீக் முன் பருவம்

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த நெய்மர்

“சோகமோ அதிகம், வலியோ மிகவும் அதிகம், மற்றும் அழுகையும் தொடர்கிறது. மீண்டும் ஒருமுறை என் வாழ்க்கையில் மிகவும் பிடித்த ஒரு விடயத்தை சிறிது காலம் செய்யாமல் இருக்க போகிறேன். அது கால்பந்து விளையாடுவது. இது என்னை மிகவும் கவலையடைய செய்கிறது” எனத்தெரிவித்தார்.

கடந்த வருட சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் முதன் முறையாக இறுதிப்போ ட்டி வரை முன்னேறிய PSG அணி சார்பாக நெய்மர், 17 போட்டிகயில் விளையாடி அவற்றில் 13 கோல்களை அடித்தார்.

ஏற்கனவே அவ்வணியின் மற்றைய முன்கள வீரரான ஏஞ்சல் டீ மரியாவும் உபாதையாகியுள்ள நிலையில், நெய்மரின் இந்த உபாதையும் PSG அணியை பலத்த அதிர்ச்சிக்குள்  உள்ளாக்கியுள்ளது.   

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<