மீண்டும் பங்களாதேஷ் T20I அணியில் இணையும் மஹமதுல்லா

118

இலங்கைக்கு எதிரான T20I தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கெடுக்கும் பங்களாதேஷ் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள BCCI

அடுத்த மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றது. இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரும், அதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் சில்லேட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. 

அதன்படி இந்த T20I மற்றும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கெடுக்கும் பங்களாதேஷ் குழாம்களே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன 

இதில் மார்ச் மாதம் 04ஆம் ஆரம்பமாகவுள்ள T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் முன்னணி சகலதுறைவீரரான மஹமதுல்லா இணைக்கப்பட்டிருக்கின்றார் 

கடைசியாக 2022ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்காக T20I போட்டியொன்றில் ஆடியிருந்த மஹமதுல்லா ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் (BPL) என்பவற்றில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காகவே தற்போது பங்களாதேஷ் T20I அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இதேநேரம் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹசனிற்கு அவருக்கு ஏற்பட்டிருக்கும் பார்வைக் கோளாறு காரணமாக இலங்கை அணியுடனான T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது 

ராகுல் திடீர் விலகல்; இந்திய அணியில் இணைந்த இளம் வீரர் 

இதேநேரம் அறிமுக சுழல்வீரரான அலிஸ் அல் இஸ்லாம் பங்களாதேஷ் T20I குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், மெஹிதி ஹஸன் மிராஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

பங்களாதேஷ் குழாமானது இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் புதிய அணித்தலைவரான நஜ்முல் ஹொசைன் ஷன்டோ மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

பங்களாதேஷ் T20I குழாம் 

நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (தலைவர்), லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், மொஹமட் நயீம், தவ்ஹீத் ரிதோய், சௌம்யா சர்க்கார், மஹேதி ஹஸன், மஹ்மதுல்லா, தய்ஜூல் இஸ்லாம், ரிசாட் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், முஸ்தபிசுர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம், தன்சீம் ஹஸன், அலிஸ் அல் இஸ்லாம் 

பங்களாதேஷ் ஒருநாள் குழாம் (முதல் இரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணி 

நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (தலைவர்), அனாமுல் ஹக், சௌம்யா சர்க்கார், தன்சித் ஹஸன், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹீத் ரிதோய், மஹ்மதுல்லா, மெஹிதி ஹஸன் மிராஸ், தய்ஜூல் இஸ்லாம், ரிசாட் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், சொரிபுல் இஸ்லாம், தன்சீம் ஹஸன், முஸ்தபிசுர் ரஹ்மான் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<