உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டும் சந்திமால்

278

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் 12 போட்டிகள் இன்று (10) நடைபெற்றன.

NCC எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

தினேஷ் சந்திமால் மற்றும் அணித்தலைவர் சத்துரங்க டி சில்வானின் அபார சதத்தின் மூலம் புளூம்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் NCC அணி 92 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இரோஷ் – அதீஷ ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் சோனகர் கழகத்திற்கு வெற்றி

சந்திமால் (113*) மற்றும் சத்துரங்க (102) 3 ஆவது விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் NCC அணி 335 ஓட்டங்களை பெற்றது. எனினும் புளூம்பீல்ட் கழகம் 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC – 335/3 (50) – டினேஷ் சந்திமால் 113*, சதுரங்க டி சில்வா 102, மாலிங்க அமரசிங்க 45

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 243 (45.1) – கீஷத் பண்டிதரத்ன 58, சச்சின் ஜயவர்தன 55, அசேல் சிகேரா 50, அசித்த பெர்னாண்டோ 3/43, சச்சிந்து கொலம்பகே 3/46

முடிவு – NCC அணி 92 ஓட்டங்களால் வெற்றி

Photos: Bloomfield C & AC vs NCC | Major Limited Overs Tournament 2018/19


SSC எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

அனுபவ வீரர் சச்சித்ர சேனநாயக்கவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் கடற்படை அணியுடனான போட்டியில் SSC அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

Photos: SSC vs Navy SC | Major Limited Overs Cricket Tournament 2018/19

வெலிசர, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சேனநாயக்க துடுப்பாட்டத்தில் 55 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 204/9 (50) – தரூஷன் இத்தமல்கொட 73, சலித்த பெர்னாண்டோ 27, சச்சித்ர சேனநாயக்க 3/40, ஜெப்ரி வெண்டர்சே 3/45

SSC – 207/8 (49.3) – சாமர கப்புகெதர 58, சச்சித்ர சேனநாயக்க 55, துஷான் ஹேமன்த 3/42

முடிவு – SSC கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

பனாகொட, இராணுவ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இராணுவப் படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது.

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக ஆடும் இந்திய வீரர் கரன் நந்தே சதம் பெற்றபோதும் இராணுவ அணியின் ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியுடன் மஹேந்திர சிங் டோனிக்கு திடீர் ஓய்வு

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 253 (50) – கரன் நந்தே 106, தசுன் செனவிரத்ன 65, ஜனித் சில்வா 3/31

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 254/5 (46.1) – ஹிமேஷ லியனகே 87, லக்ஷான் எதிரிசிங்க 55*, டில்ஷான் டி சொய்சா 39, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/31

முடிவு – இராணுவப் படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

பதுரெலிய அணியை 137 ஓட்டங்களுக்கு சுருட்டிய களுத்துறை கழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. மக்கொன சர்ரே விளேஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் களுத்துறை அணிக்காக நிலுஷன் நோனிஸ் 55 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 137 (33.1) – பிரமுத் ஹெட்டிவத்த 39, லஹிரு சமரகோன் 35, மதீஷ பெரேரா 3/22, எரங்க ரத்னாயக்க 2/24

களுத்துறை நகர கழகம் – 138/3 (28.4) – நிலுஷன் நோனிஸ் 55*, வீ. அமுகொட 40*   

முடிவு – களுத்துறை நகர கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


CCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

Photos: CCC vs Saracens SC – Major Limited Overs Tournament 2018/19

CCC – 211 (48) – மினோத் பானுக்க 83, லஹிரு மதுஷங்க 34*, சச்சித்ர பெரேரா 3/47, சாமிக்கர எதிரிசிங்க 2/30

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 200 (48.4) – நிபுன் கருனாநாயக்க 40, சச்சித்ர பெரேரா 35, மலிந்த புஷ்பகுமார 2/32, லஹிரு கமகே 2/33

முடிவு – CCC 11 ஓட்டங்களால் வெற்றி


BRC எதிர் காலி கிரிக்கெட் கழகம்

BRC – 321/4 (45) – பானுக்க ராஜபக்ஷ 105*, சவின் குணசேகர 97, டேஷான் டயஸ் 55, ருமேஷ் புத்திக்க 41, கவின் கொத்துகொட 2/59

காலி கிரிக்கெட் கழகம் – 271 (42.2) – ஹர்ஷ விதான 48, நிசல் ரன்திக்க 43, அஷான் மதுசங்க 43, கவின் கொத்துகொட 42, டீ.என்.சம்பத் 3/48, மொஹமட் ஷிராஸ் 3/64, சமீர திசானாயக்க 2/37

முடிவு –  BRC 50 ஓட்டங்களால் வெற்றி

Photos: Police SC vs Panadura SC | Major Limited Over Tournament 2018/2019

ThePapare.com | Brian Dharmasena | 10/03/2019 | Editing…..


குருநாகல யூத் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

Photos: Kurunegala Youth CC vs Tamil Union C & AC | Major Limited Overs Tournament 2018/19

குருநாகல யூத் கிரிக்கெட் கழகம் – 212/9 (50) – தினுஷ்க மாலன் 60, லஹிரு ஜயரத்ன 35, பினுர பெர்னாண்டோ 3/43, ஜீவன் மெண்டிஸ் 2/44

தமிழ் யூனியன் கழகம் – 203 (47) – பினுர பெர்னாண்டோ 61, மனோஜ் சரத்சந்திர 29, தினுக்க மாலன் 4/34, லஹிரு ஜயரத்ன 2/25, ரன்தீர் ரணசிங்க 2/32, சஞ்சீவ பிரியதர்ஷன 2/65

முடிவு – குருநாகல யூத் கிரிக்கெட் கழகம் 9 ஓட்டங்களால் வெற்றி


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

Photos: Police SC vs Panadura SC | Major Limited Overs Tournament 2018/19

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 246/9 (50) – விஷ்வ சதுரங்க 79, அசன்த பஸ்னாயக்க 53, சுபுன் மதுசங்க 2/34, தினுக்க ஹெட்டியாரச்சி 2/41, மஞ்சுல ஜயவர்தன 2/38

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 250/5 (48) – கீதன்ஷ் கேரா 111, அமித் குமார 35

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 222 (49.1) – ஷெஹான் ஜயசூரிய 55, அஷேன் சில்வா 53, டிலான் ஜயலத் 32,  உமேக சத்துரங்க 3/32, சம்பத் பெரேரா 3/29, திலிப் தாரக்க 2/25

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 158 (41.4) – கௌஷல்ய கஜசிங்க 33, திலிப் தாரக்க 31, சஹன் ஆரச்சிகே 3/28, உபுல் இந்திரசிறி 2/32

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 64 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

Photos: Colts CC vs Lankan CC | Major Limited Overs Tournament 2018/19

லங்கன் கிரிக்கெட் கழகம் – 268/8 (50) – கீத் குமார 76, ஷிப்ரான் முத்தலிப் 45, கவிஷ்க அஞ்சுல 3/56, பிரபாத் ஜயசூரிய 2/49

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 271/3 (47.3) – ஹஷான் துமிந்து 111, சதீர சமரவிக்ரம 102, ஜெஹான் டானியல் 31, பூர்ண சானுக்க 2/39

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி  


இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க. எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

Photos: Moors SC vs SL Ports Authority SC | Major Limited Overs Tournament 2018/19

இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க. – 209 (49.5) – யொஹான் டி சில்வா 54, கயான் மனீஷ 39, மலித் டி சில்வா 3/32, தரிந்து கௌஷால் 2/36, அயன சிறிவர்தன 2/46

சோனகர் விளையாட்டுக் கழகம் – 213/5 (33.4) – பபசர வதுகே 96, அதீஷ திலஞ்சன 51*, லஹிரு அத்தநாயக்க 42, இமேஷ் உதயங்க 3/52

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 89 (28.4) – புத்திக்க மெண்டிஸ் 29, நிஷான் பீரிஸ் 5/16, இஷான் ஜயரத்ன 2/25, அமில அபொன்சோ 2/27

ராகம கிரிக்கெட் கழகம் – 92/1 (13.5) – தினெத் திமோத்ய 45, செஹான் பெர்னாண்டோ 41*

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<