இந்த ஆண்டு பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் இல்லை

130
espncricinfo

கொவிட்-19 வைரஸின் தீவிரத்தின் காரணமாக இந்த ஆண்டு பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் (BPL) நடைபெறாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் முதன்முறையாக மூன்று அணிகள் மோதும் 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் டாக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான ஊடக சந்திப்பின் போது, பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் இந்த ஆண்டு நடைபெறாது. தற்போது நிலவிவரும் கடினமான சூழ்நிலையின் காரணமாக, அடுத்த ஆண்டு நடைபெறுமா என பொருத்திருந்து பார்ப்போம் என நஸ்முல் ஹசன் குறிப்பிட்டார்.

மொஹமட் இர்பானின் உயரத்தை மிஞ்சவுள்ள 21 வயதான முடாசிர்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் எப்போது ஆரம்பித்தாலும், வெளிநாட்டு வீரர்களின் வருகை முக்கிய விடயமாக உள்ளது. அதேநேரம், தயாரிப்புக்கான ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவசியம் உள்ளது. இவை அனைத்தையும் பங்களாதேஷில் இருந்து எடுக்க முடியும் என்றால், அதற்கான அனுமதி எமக்கு இருக்கிறது. 

ஆனால், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் பெரியது. அணி முகாமைத்துவம் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை என்பன மிகவும் அதிகம். எனவே, அதனை எம்மால் சரியாக நடத்த முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் தெரியவில்லை” என்றார். 

அதேநேரம், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கினை வெளிநாட்டில் நடத்துவது இயலாத விடயம் எனவும், அங்கு உருவாக்க வேண்டிய உயிரியல் பாதுகாப்பு வலயம் மற்றும் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக அணிகளிடம் கலந்துரையாடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

“வெளிநாட்டில் தொடரை நடத்துவது இலகுவான விடயமல்ல. பங்களாதேஷில் இந்த தொடரை நடத்துவதற்கு முடிவுசெய்தாலும், ஒரு அல்லது இரண்டு அணிகள் ஏற்றுக்கொண்டாலும், ஏனைய அணிகளுக்கு அதனை செய்வது கடினம்.

Video – சங்கக்கார சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக மாற காரணம் என்ன?

அதேநேரம், இந்த சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து மற்றும் ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறந்த முறையில் உயிரியல் பாதுகாப்பு வலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு பணத்தை செலவு செய்து எல்லோராலும் இதனை செய்ய முடியாது” என நஸ்முல் ஹசன் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<