இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள BCCI

Indian Cricket

109

இந்திய வீரர்கள் நாட்டின் முன்னணி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுகளில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடுவதற்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்கும் வீரர்களை கருத்திற்கொண்டு இந்த விடயத்தை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவராக இப்ரஹீம் ஷட்ரான் நியமனம்

IPL தொடரில் விளையாடுவதற்காக தங்களுடைய மாநில அணிகளில் வீரர்கள் விளையாடாமால் நேரத்தை வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, வீரர்களின் ஒழுக்கத்தை மேப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் உபாதையிலிருந்து குணமடைந்து வரும் வீரர்களை தவிர்த்து ஏனைய அனைத்து வீரர்களும் தங்களுடைய மாநில அணிகளுக்காக அடுத்துவரும் ரஞ்சிக்கிண்ணப் போட்டிகளில் விளையாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய அணி மற்றும் IPL தொடர் என்பவற்றை மாத்திரம் முன்னோடியாக கொண்டு வீரர்கள் செயற்படக் கூடாது என்ற காரணத்துக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வீரர்கள் ரஞ்சிக்கிண்ணத்தில் விளையாட வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க தொடரிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இசான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோருடன் IPL தொடருக்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் என்ற தகவல்கள் வெளியாகின. அதுமாத்திரமின்றி சிரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சஹார் ஆகியோரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. எனவே இவர்கள் அனைவரும் அடுத்த வார ரஞ்சிக்கிண்ண போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<