கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்!

India tour of Bangladesh 2022

243
Ishan Kishan breaks Chris Gayle's record

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டைச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக செட்டகிரொமில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் வெறும் 126 பந்துகளில் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

>> 12 வருடங்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனட்கட்!

போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இவர், ஆரம்பத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், சதத்தை கடந்த பின்னர் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

இஷான் கிஷன் 85 பந்துகளில் கன்னி சதத்தை கடந்தபோதும், அடுத்த 18 பந்துகளில் 150 ஓட்டங்களையும், அதன்பின்னர் 23 பந்துகளை எதிர்கொண்டு இரட்டைச்சதத்தையும் கடந்தார். எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக இரட்டைச்சததத்தை கடந்தவர் என்ற கிரிஸ் கெயிலின் சாதனையை இவர் முறியடித்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் கிரிஸ் கெயில் 138 பந்துகளில் இரட்டைச்சதத்தை கடந்திருந்தார். இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு இந்த சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

அதேநேரம், மொத்தமாக 131 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 24 பௌண்டரிகள் அடங்கலாக 210 ஓட்டங்களை கடந்த இவர், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முதல் இந்திய அணியின் தற்போதைய தலைவர் ரோஹித் சர்மா (3 இரட்டைச்சதங்கள்), விரேந்திர ஷெவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இரட்டைச்சதங்களை பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<