Home Tamil இறுதிவரை போராடியும் மெதிவ்ஸின் போராட்டம் வீண்

இறுதிவரை போராடியும் மெதிவ்ஸின் போராட்டம் வீண்

Lanka Premier League 2022

294
Angelo Mathews

இந்த ஆண்டுக்கான (2022) லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 06 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> தனுக, நுவனிந்துவின் அதிரடியால் கோல் அணிக்கு அபார வெற்றி

நேற்று (12) பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் ஜப்னா கிங்ஸ் வீரர்களை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி வீரர்கள் திசர பெரேரா, சொஹைப் மலிக் ஆகிய வீரர்களின் மத்திய வரிசை அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சொஹைப் மலிக் இறுதிவரை ஆட்டமிழக்காது 25 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் திசர பெரேரா 13 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் 3 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கொழும்பு ஸ்டார்ஸ் பந்துவீச்சில் பென்னி ஹொவேல் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 179 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதோடு ஒரு கட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.

ஆனால் இந்த தருணத்தில் அதிரடியுடன் கூடிய பொறுப்புடன் ஆடிய அஞ்சலோ மெதிவ்ஸ் மெதிவ்ஸ் – பென்னி ஹொவேல் ஜோடி 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 90 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

எனினும் தொடர்ந்த ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு கை கொடுத்த பென்னி ஹொவேல் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பெளண்டரிகள் உடன் 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பென்னி ஹொவேலை அடுத்து போட்டியின் இறுதி 5 பந்துகளுக்கும் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் களத்தில் இருந்து போராடிய போதும் அவரது அணி போட்டியின் இறுதி ஓவரில் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் 06 ஓட்டங்களால் துரதிஷ்டவசமாக தோல்வியினை தழுவியது.

கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் மெதிவ்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> LPL தொடரில் தசுன் ஷானகவுக்கு அபராதம்!

இதேநேரம் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜேம்ஸ் பு(f)ல்லர் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணி வீரர் ஜேம்ஸ் பு(f)ல்லர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றி மூலம் ஜப்னா கிங்ஸ் இந்த தொடரில் தம்முடைய நான்காவது வெற்றியினைப் பதிவு செய்ய, இது கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களுக்கு தொடரில் நான்காவது தோல்வியாக மாறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Colombo Stars
172/8 (20)

Jaffna Kings
178/4 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Niroshan Dickwella b Benny Howell 17 11 0 2 154.55
Avishka Fernando c Naveen Ul Haq b Benny Howell 32 31 4 0 103.23
Ashan Randika c Charith Asalanka b Naveen Ul Haq 27 14 2 2 192.86
Sadeera Samarawickrama b Dominic Drakes 32 25 3 0 128.00
Shoaib Malik not out 35 26 5 0 134.62
Thisara Perera not out 29 13 3 1 223.08


Extras 6 (b 1 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total 178/4 (20 Overs, RR: 8.9)
Bowling O M R W Econ
Kasun Rajitha 2 0 19 0 9.50
Nawod Paranavithana 2 0 13 0 6.50
Seekkuge Prasanna 4 0 24 0 6.00
Benny Howell 4 0 37 2 9.25
Naveen Ul Haq 4 0 28 1 7.00
Dominic Drakes 4 0 53 1 13.25


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b Thisara Perera 0 4 0 0 0.00
Daniel Bell Drummond c Ashan Randika b Mahesh Theekshana 1 4 0 0 25.00
Nawod Paranavithana b James Fuller 8 9 2 0 88.89
Dinesh Chandimal b Asitha Fernando  19 18 3 0 105.56
Charith Asalanka lbw b Vijayakanth Viyaskanth 3 8 0 0 37.50
Angelo Mathews not out 73 38 8 3 192.11
Seekkuge Prasanna c Avishka Fernando b Vijayakanth Viyaskanth 4 10 0 0 40.00
Dominic Drakes run out (Thisara Perera) 14 8 2 0 175.00
Benny Howell c Shoaib Malik b 43 20 5 2 215.00
Kasun Rajitha not out 1 1 0 0 100.00


Extras 6 (b 0 , lb 3 , nb 0, w 3, pen 0)
Total 172/8 (20 Overs, RR: 8.6)
Bowling O M R W Econ
Thisara Perera 3 0 31 1 10.33
Mahesh Theekshana 4 0 32 1 8.00
James Fuller 4 0 32 2 8.00
Asitha Fernando  4 1 31 1 7.75
Vijayakanth Viyaskanth 4 0 32 2 8.00
Dunith wellalage 1 0 11 0 11.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<