நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் பங்குகொள்ள ரஷ்யா பயணமாகும் இலங்கை சிறுவர்கள்

205
Local boys gear up

6 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகின் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சி எதிர்வரும் 8 ஆம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் ஆரம்பமாகவுள்ளது.

உலகின் 210 நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை நிகழ்ச்சியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக 12 வயதுடைய தினுக்க பண்டார மற்றும் மொஹமட் அயான் சாதாத் ஆகிய சிறுவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நட்புறவு கால்பந்து போட்டியானது இளையோர் கால்பந்தாட்டத்தையும் செழிப்பான வாழ்க்கை முறையையும் அபிவிருத்தி செய்வதனையும் குறிக்கோளாகக் கொண்டு கெஸ்ப்ரோம் நிறுவனம் (Gazprom), பீபாவின் ஆதரவுடன் முன்னெடுத்துள்ளது.

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது..

அத்துடன், உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை, திறந்த மனப்பாங்கு, பல்வேறு கலாச்சாரங்களையும் இனங்களையும் மதித்தல் போன்ற நற்பண்புகளை ஊக்குவித்தல் என்பன இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து கால்பந்து விளையாட்டின் சமத்துவத்தை எடுத்துக்காட்டுவதே இந்த நட்புறவு போட்டியின் பிரதான குறிக்கோளாகும்.

எனவே, 6 ஆவது தடவையாகவும் நடைபெறவுள்ள நட்புறவுக்கான கால்பந்தாட்ட போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக தினுக்க பண்டார மற்றும் மொஹமட் அயான் சாதாத் ஆகிய சிறுவர்கள் மொஸ்கோவில் நடைபெறவுள்ள மூன்று நாள் வதிவிட பயிற்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் 14 முதல் 16 வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்களால் வழங்கப்படவுள்ளதுடன், இதன் போது உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் 32 சர்வதேச அணிகளில் இவ்வனைத்து நாடுகளையும் சேர்ந்த சிறுவர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர். இந்த அணிகள் கெஸ்ப்ரொம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட சர்வதேசப் போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடவுள்ளது.

இதன்படி, இலங்கையிலிருந்து செல்லவுள்ள நுகேகொட புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த தினுக்க பண்டார லயன்ஸ் அணியின் கோல் காப்பாளராக செயற்படவுள்ளார்.

ஆரம்பப் போட்டியில் ஆக்ரோசம் காண்பித்த ஸாஹிரா வீரர்கள்

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட..

தனது 6 ஆவது வயதில் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்த தினுக்க, ஆரம்ப காலத்தில் வெள்ளவத்தை குரே மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது மென்செஸ்டர் கால்பந்து அகடமியில் (Manchester Soccer Acadamey) பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றார். ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியொனல் மெஸ்சியின் விளையாட்டை பெரிதும் விரும்புகின்ற அவர், எதிர்காலத்தில் இலங்கை தேசிய கால்பந்து அணிக்காக விளையாடும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.

இதேநேரம், கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மொஹமட் அயான் சாதாத், இளம் ஊடகவியலாளராகச் செயற்பட்டு உள்ளுரிலும், உலகலாவிய ரீதியிலும் கால்பந்தாட்டத்துக்கான நட்புறவுத் திட்டம் தொடர்பான தகவல்களை சர்வதேச சிறுவர் ஊடக நிலையத்துக்கு வழங்கவுள்ளார்.

தனது 7 வயதில் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்துள்ள அயான் சாதாத், றோயல் கல்லூரியின் 13 வயதுக்கு உட்பட்ட கால்பந்து அணியிலும், மென்செஸ்டர் கால்பந்து அகடமியிலும் தற்போது விளையாடி வருகின்றார்.

கால்பந்து விளையாட்டுடன் தொடர்புடைய புத்தகங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அவர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சலாஹ் மற்றும் நெய்மர் போன்ற வீரர்களை அதிகம் பின்பற்றியும் வருகின்றார்.

இதேவேளை, நட்புறவுக்கான கால்பந்தாட்ட சர்வதேச சிறுவர் பேரவையிலும் இவ்விரு சிறுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஏனைய நாட்டு சிறுவர்களை சந்தித்து தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதுடன், பிரபல கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கால்பந்து விளையாட்டின் பெறுமதிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளனர்.

இறுதியாக, பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் ஆரம்ப விழாவையும், ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆரம்பப் போட்டியையும் இந்த சிறுவர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<