விறுவிறுப்பான போட்டியில் இறுதி நிமிடத்தில் ஆட்டத்தை சமப்படுத்திய அட்லெடிகோ மெட்ரிட்

242

ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்து போட்டியான லா லிகா லீக் போட்டிகளுக்காக நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டு விறுவிறுப்பான போட்டிகளில், செவில்லா மற்றும் அத்லெடிக் பில்பாவோ அணிகளுக்கிடையிலான போட்டியில், மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் செவில்லா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய அதேநேரம், அட்லெடிகோ மெட்ரிட் மற்றும் டெபோர்டிவோ அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

செவில்லா எதிர் அத்லெடிக் பில்பாவோ

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் செவில்லா அணியின் சொந்த மைதானமான ஈஸ்டடியோ ரமூன் அரங்கில் நடைபெற்றது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு? தீர்மானம் மிக்க போட்டிகள் குறித்த ஒரு அலசல்

இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் 8 சுற்றின் 7ஆவதும்….

சம வலிமை மிக்க இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆரம்பம் முதல் இரு அணிகளுக்கும் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகள் மயிரிழையில் தவறவிடப்பட்டிருந்தன.

எனினும், போட்டியின் 14ஆவது நிமிடம், பின்கள வீரரொருவர் செய்த தவறினால் செவில்லா அணிக்கு பெனால்டி ஓன்று வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றிக்கொள்ளும் முனைப்புடன் ஜோவேடிக் ஸ்டீவென் அடித்த பந்து கோல் காப்பாளரினால் தடுக்கப்பட்ட போதிலும், ரீபவுண்ட் முறையில் வந்த பந்தை இபோரா மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார்.  

அதனையடுத்து, பலத்த போட்டிக்கு மத்தியில் இரு அணிகளினாலும் பல்வேறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், எவ்விதமான கோல்களையும் யாராலும் பெற்றுகொள்ள முடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய செவில்லா அணி, தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாசிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கு அடுத்ததாக இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்றாவது இடத்துக்கு முன்னேறியது.  

போட்டியின் முழு நேரம்: செவில்லா 1-0 அத்லெடிக் பில்பாவோ

கோல் பெற்றவர்கள்
செவில்லா – இபோரா – 14’


அட்லெடிகோ மெட்ரிட் எதிர் டெபோர்டிவோ

டெபோர்டிவோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற்றுக்கொண்டதால் போட்டி சமநிலையடைந்தது.

போட்டியின் 13ஆவது நிமிடம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை ப்ளோரின் அடோன் கோலாக மாற்றினார். அதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க முயசித்த போதும் முதல் பாதிநேரம் 1-0 என்ற கணக்கில் நிறைவுற்றது.

அதன் பின்னர் இரண்டாம் பாதி நேரத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், போட்டியின் 68ஆவது நிமிடம்  கிடைக்கப்பெற்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்துவான் க்ரிஸ்மன் கோல் அடித்து போட்டியை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பெர்னாண்டோ டோரஸ் மற்றும் அலெக்ஸ் பெர்கண்டினோ இருவரும் பந்தை ஹெடர் செய்ய முயன்ற வேளையில், இருவரதும் தலைகள் மோதிகொண்டதால் பெர்னாண்டோ டோரஸ் மயங்கி விழ போட்டி சற்று நேரம் தடைப்பட்டிருந்தது. எனினும், பின்னர் மேலதிக கோல்களை இரு அணிகளும் பெற்றுக்கொள்ளாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

முழு நேரம்: அட்லெடிகோ மெட்ரிட் 1-1 டெபோர்டிவோ

கோல் பெற்றவர்கள்

டெபோர்டிவோ ப்ளோரின் அடோன் 14’
அட்லெடிகோ மெட்ரிட் அந்துவான் க்ரிஸ்மன் 68’