கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி

0

கால்பந்து உலகின் பெரும் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாரிய நிதியை வழங்கியுள்ளனர். 

ரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர்……

பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸி ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்துள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தனது சொந்த நாடான ஆர்ஜன்டீனாவில் இருக்கும் மருத்துவ நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையிலேயே அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.  

மெஸ்ஸியின் நிதியுதவியை ஸ்பெயின் மருத்துவனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது

ஜுவான்டஸ் அணி நட்சத்திரம் ரொனால்டோ மற்றும் அவரது முகவரான ஜோர்ஜ் மெண்டெஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புற்றவர்களுக்காக போர்த்துக்கல் மருத்துவமனைகளில் மூன்று அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்க நிதி அளித்துள்ளார். இதற்காக இருவரும் ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்திருப்பதாக .பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

இந்த அவசர சிகிச்சை பிரிவுக்கு ரொனால்டோ மற்றும் மெண்டெஸின் பெயர் சூட்டப்படும் என்று போர்த்துக்களில் இருக்கும் மத்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.  

போர்த்துக்கலில் கொரோனா தொற்றினால் இதுவரை 2,362 பேர் பாதிப்புற்றிருப்பதோடு 33 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் ரொனால்டோவின் ஜுவான்டஸ் கழகத்தின் பாலோ டிபாலா, ப்ளைஸ் மட்டியுடி மற்றும் டனியேல் ருகானி ஆகியோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

பாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று

இத்தாலியின் முன்னணி கால்பந்து கழகமான ஜுவான்டஸின்…….

அதேபோன்று, தற்போது கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 69,176 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 6,820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சமாளிக்க அந்நாட்டு சுகாதாரத் துறை திணறி வருகிறது.  

அதேபோன்று பார்சிலோனா அணியின் முன்னாள் முகாமையாளரும் தற்போது மன்செஸ்டர் யுனைடட் முகாமையாளருமான பெப் குவாடியோலா ஸ்பெயினின் வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒரு மில்லியன் யூரோ தொகையை அளித்துள்ளார்.

பார்சிலோனாவை சொந்த ஊராகக் கொண்ட அவர் இந்த பணத்தை அந்த நகரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் நோய்த் தொற்று உள்ளானவர்கள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

தனது செயலுக்கான எதிர்வினையை ஏற்க தயார்: லூக்கா ஜோவிக்

ரியல் மெட்ரிட் கால்பந்து கழக வீரரான லூக்கா ஜோவிக்…….

ஸ்பெயினில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 42,058 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 2,991 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழங்கப்படும் பணம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படும் என்று குவாடியோலா தரப்பில் கூறப்பட்டுள்ளது

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு பயேர்ன் முனிச் முன்கள வீரர் ரொபர்ட் லொன்டொஸ்கி கடந்த வாரம் ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

உலகின் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து வீரர்கள் வரிசையில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ முதல் இரு இடங்களில் இருப்பதாக பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகை ஒன்றின் கணக்கெடுப்பு முடிவு காட்டுகிறது. இதன்படி மெஸ்ஸியின் மொத்த ஆண்டு வருவாய் 131 மில்லியன் யூரோ என்பதோடு ரொனால்டோவின் ஆண்டு வருவாய் 118 மில்லியன் யூரோக்களாகும்

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவின் பிரதான கழக மட்ட கால்பந்து போட்டிகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுக்களும் நிறுத்தப்பட்டு அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<